சனி, 13 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் பற்றிய முழுத்தகவல்கள்

*ஒலிம்பிக் பற்றிய முழுத்தகவல்கள் இங்கு ஒரே பதிவில்...
#
🏅சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முதன் முதலில் கிரேக்க(Greek) நகரமான ஒலிம்பியாவில் தொடங்கப்பட்டது.

*பழங்கால ஒலிம்பிக் போட்டி :*
🏅கி.மு 776 முதல் கி.பி 393 வரை ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மவுண்ட் ஒல்ம்பியாவில் இப்போட்டி நடத்தப்பட்டன.

#🏅இப்போட்டிகள், எத்யேஸ் மன்னர் காலம்வரை நீடித்து வந்தது. ரோமாபுரி ஆட்சியாளர் தியோடோஷயஸ் கி.மு 393ல், ஒலிம்பிக் போட்டியை தடை செய்தார்.

*நவீன கால ஒலிம்பிக் போட்டி :*
🏅நவீன ஒலிம்பிக் போட்டி கி.பி.1896 ல் தொடங்கப்பட்டன. நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர் பியரி டி குபேர்டின்(Pierre de Coubertin) , இவரே நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கப்படுக்கிறார்.

🏅 முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் பியரி டி குபேர்டின்.

🏅ஒலிம்பிக்கின் தாரக மந்திரம் “Faster, Higher, Stronger (Citius, Altius, Fortius)(லத்தீன் மொழியில் இருந்து)”. உருவாக்கியவர் ஹென்றி டைடொன்(Henri Didon)

🏅ஒலிம்பிக் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
இது கோடை கால ஒலிம்பிக் மற்றும் குளிர் கால ஒலிம்பிக் என இரு முறை நடைபெற்று வந்தது.

🏅1924ல் முதல் குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
முதன் முதலில் பெண்கள் 1900ஆம் ஆண்டு பாரிஸில் கலந்துகொண்டனர்.

🏅1992 வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டன.

🏅அதன் பிறகு கோடை கால போட்டி நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் குளிர் கால போட்டி நடத்தப்படுகிறது.

🏅ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 முதல் ஒவ்வொரு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

*ஒலிம்பிக்கில் மராத்தான் போட்டி :*
கி.மு 490ல், நடந்த மாரத்தான் போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தான் நகரிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸுக்கு ஓடி வந்து சொன்ன கிரேக்க வீரர் Pheidippides , ”நாம் வென்றோம்!(We have won)” என்று கூறி, உயிர் துறந்தார். இவருடைய நினைவாக மாரத்தான் என்ற ஓட்டப்பந்தயமும் சேர்க்கப்பட்டது.

🏅தற்போது கடைப்பிடிக்கப்படும் 42.195 கி.மீ (26.22மைல்) போட்டித் தொலைவு, 1921ஆம் ஆண்டு International Amateur Athletic Federation (IAAF) என்ற அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

🏅பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

🏅இதுவரை 30 ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

🏅30வது ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு (2012) லண்டனில் நடைப்பெற்றது.

🏅இது வரை 3 முறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நகரம் என்ற பெருமை லண்டன் நகரம் பெற்றுள்ளது.

🏅உலகப்போர்களின் காரணமாக 1916,1940 மற்றும் 1944 ஆகிய மூன்று முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

🏅இந்தியா 1900ல் முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது.இரண்டு பதக்கங்களைப் பெற்றது.

*இந்தியாவின் முதல் ஒலிம்பிக் மனிதர் :*
🏅நார்மன் கில்பேர்ட் பிரிட்சார்டு (Norman Gilbert Pritchard or Norman Trevor) (June 23, 1877 – October 31, 1929) , இவரே இந்தியா சார்பில் போட்டியிட்டவர், முதன் முதலில் இரு வெள்ளி பதக்கங்களும் இந்தியாவிற்கு இவர் மூலமே கிடைத்தது.

🏅ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி – மேரி லீலா ராவ் (1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்).

🏅நீளம் தாண்டுதலில் தொடர்ந்து நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் கார்ல் லூயிஸ்.

*ஒலிம்பிக் தீபம் (Olympic Flame) :*
🏅ஒலிம்பிக் தீபம் முதன் முதலில் நவீன் ஒலிம்பிக் போட்டியில் 1928 ல் ஆம்ஸெடர்டம்(Amsterdam) ஏற்றப்பட்டது.

🏅ஒலிம்பிக் தீபம் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் பல மாதங்களுக்கு முன் கிரீக் நாட்டில் ஒலிம்பியாவில் இந்த தீபம் ஏற்றப்பட்டு பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு ஒலிம்க் போட்டி தொடங்கும் நாளன்று ஒலிம்பிக் நடைபெறும் மைய அரங்கத்திற்கு  கொண்டு செல்லப்படுகிறது.

*ஒலிம்பிக் கொடி(Olympic Flag) :*
🏅ஒலிம்பிக் கொடி மொத்தம் ஆறு நிறங்களாலான ஐந்து வளையங்களைக் கொண்டது . அவை ஊதா(blue),மஞசள்(yellow),கறுப்பு(black),பச்சை(green) மற்றும் சிகப்பு(red) ஆகிய நிறங்களும் , அவற்றின் பின்னால் வெள்ளை (white) நிறமும் அமைந்ததாக காணப்படுகிறது . அந்த வளையங்கள் ஐந்து கண்டங்களைக்குறிக்கிறது, அவை ஆப்ரிக்கா, அமெரிக்கா,ஆசியா,ஆஸ்திர மற்றும் ஐரோப்பா ஆகியவையாகும்.

🏅ஒலிம்பிக் சின்னத்தை வடிவமைத்தவர் பியரி டி குபேர்டின்(Pierre de Coubertin) .

🏅முதன் முதலில் ஒலிம்பிக் கொடி 1920ல் பறக்கவிடப்பட்டது.

*ஒலிம்பிக் குழு(International Olympic Committee-IOC):*
🏅ஒலிம்பிக் குழு ஜூன் 23,1894 அன்று பியரி டி குபேர்டின் (Pierre de Coubertin) என்பரால் லோசான்(Lausanne)சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.

*ஒலிம்பிக் குழுவின் தலைவர்கள்(President of International Olympic Committee) :*
ஒலிம்பிக் குழுவின் முதல் தலைவர் டெமெட்ரியோஸ் விகேலாஸ்(Demetrios Vikelas).பியரி டி குபேர்டின் (Pierre de Coubertin) என்பவரே 29 வருடமாக தலைவர் பதவியில் இருந்தார்.
ஒலிம்பிக் குழுவின் அலுவலக் மொழி பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம். பன்னாட்டு ஒலிம்பிக் நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டி 1896ல் கீரீக்கில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடைபெற்றதாகும்.

*ஒலிம்பிக் பதக்கங்கள்(Olympic Medals):*
🏅ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்களுக்கு தங்கம் , வெள்ளி , வெண்கலம் பரிசுகள் ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் குழுவால்
(International Olympic Committee-IOC)
வழங்கப்படுகிறது . ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் முதலில் 1896முதல் வழங்கப்படுகின்றது. 1896 ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பரிசுகள் வழங்கப்பட்டன.

🏅1900 நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிண்ணம் (Cup) மற்றும் கோப்பைகள்(Trophies) வழங்கப்பட்டன.

🏅1904ல் நடைபெற்ற அமெரிக்காவில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியிலிருந்து தங்கம் , வெள்ளி , வெண்கலம் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒலிம்பிக் பதக்கங்கள் ஒலிம்பிக் குழு(International Olympic Committee)வழங்குகிறது.

🏅கிரேக்க கடவுளான ”நைக்(Nike)” உருவம் பதக்கத்தின் ஒரு புறத்தில் பதிந்திருக்கும்.

*ஒலிம்பிக் மாஸ்காட்(Olympic Mascot):*
🏅முதன் முதலில் 1968ல் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலிருந்து அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது.
இது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடுகளின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் விதமாக மனிதரோ அல்லது விலங்கோ சின்னமாக பயன்படுத்தப்படுகிறது.

🏅1980ல் ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட சின்னம் மிஷா(ரஷ்ய கரடி).

*ஒலிம்பிக்கின் முதன்மைகள்(First in Olympics):*
🏅நவீன ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் வென்ற வீரர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் கனோலி(James Connolly). இவருக்கு வெள்ளிப் பதக்கம் தடகளப் போட்டிக்காக கிடைத்தது.

🏅பெண்கள் போட்டியில் முதன் முதலில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை சார்லஸ் கூப்பர்(Charlotte Cooper) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றார்.

🏅மைக்கேல் பெல்ப்ஸ் (Michael Phelps)என்ற நீச்சல் வீரர்  தான் உலகிலேயே அதிக பதக்கங்களை வென்றுள்ளார். அவர் வென்ற பதக்கங்கள் மொத்தம் 22 (18 தங்கம் , 2 வெள்ளி,2 வெண்கலம் ). இரண்டாம் இடத்தை பிடித்த வீராங்கனை லாரிசா லட்டினினா( Larisa Latynina) ஓர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை.அவர் வென்ற பதக்கங்கள் மொத்தம் 18(9 தங்கம் , 5 வெள்ளி,4 வெண்கலம் ).

🏅ஒலிம்பிக்கை முதன் முதலில் ஒளிபரப்பிய தொலைக்காட்சியின் பெயர் Telefunken and Fernseh(ஜெர்மனி நாட்டை சேர்ந்தது),ஒளிபரப்பிய ஆண்டு 1936 .

*இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி:*
🏅இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் கோடை கால இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2010.

🏅முதல் குளிர்கால இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 2012.

*ஒலிம்பிக்கில் இந்தியா:*
🏅இந்தியா முதல் முறை பங்கேற்பு -1900.

🏅ஒலிம்பிக்கில் இந்தியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்ற ஆண்டு 1920.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக