வெப்பம்
*.வெப்பத்தின் அலகு ஜூல்.
*.வெப்ப நிலையின் அலகு செல்சியஸ்(அல்லது)கெல்வின்
*.மனித உடம்பின் சராசரி வெப்ப நிலை– 36.900c
*.செல்சியஸிக்கும் கெல்வினுக்கும் உள்ள தொடர்புk = c+273வெப்பவியலின்அடிப்படைக்கருத்துகள்:
*.1 கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை ஒருகெல்வின் வெப்பநிலை உயர்த்துவதற்குச் செய்யப்பட வேண்டிய வேலை அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத் திறன் எனப்படும்.
*.ஒரு பொருளின் வெப்ப ஏற்பத் திறன் என்பது அதன் வெப்ப நிலையை 1 கெல்வின் உயர்த்துவதற்குச் செய்யப்பட வேண்டிய வேலையைக் குறிக்கும்
*.வெப்பப் பொருளால் இழந்த வெப்பமானது, குளிர்ந்த பொருளால் ஏற்கப்பட்ட வெப்பத்திற்கு சமமானது
*.திண்மப் பொருளின் உருகுதலின் மறை வெப்பம் எனப்படுவது ஒரு கிலோ கிராம் நிறையுள்ள திண்மப்பொருளை அதன் உருகுநிலையில் திரவமாக மாற்றத் தேவையான வெப்பம் ஆகும்.
*.ஒரு திரவத்தின் ஆவியாதலின் மறை வெப்பம் எனப்படுவது ஒரு கிலோ கிராம் திரவம் அதன் கொதிநிலையில் ஆவியாவதற்குத் தேவைப்படும் வெப்பம் ஆகும்.
*.ஈரப்பதம் என்பது வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியின் அளவைக் குறிக்கும்.
*.வெப்பச் சமநிலை(Thermal equilibrium )என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல்உள்ளன. இந்நிலைவெப்பச் சமநிலைஎனப்படும். இந்நிலைஇயக்கச் சமநிலை(Dynamical equilibrium) எனவும் அழைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக