சனி, 10 ஜூன், 2017

ஜனாதிபதி தேர்தல் ஒரு பார்வை



ஜனாதிபதி தேர்தல் ஒரு பார்வை

*நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள்மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்,*

*இதில் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும்எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுக்கு வாக்குரிமை இல்லை. (உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர், ரேகா,நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள், மேலும், உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் எம்.எல்.சி.க்கள் (சட்டப்பேரவை மேலவை) இருப்பார்கள் அவர்களால் வாக்களிக்க முடியாது!)*

*நாடு முழுவதும் 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்கள்,*

*776 எம்.பி-க்கள் உள்ளனர்,*

*இவர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்,*

*1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு மதிப்புவழங்கப்பட்டுள்ளது,*

*இதன்படி ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும்,*

*எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு, என்பது ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும்,*

*அதாவது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போதும் அங்கு எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பும் அதிமாக இருக்கும்,*

*நாட்டில் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்புதான்மிக அதிகமாகும் 208 ஆகும்,*

*குறைவான மதிப்பு கொண்டது சிக்கிம் ஆகும்,*

*அந்த மாநில எம்.எல்.ஏ-வின் வாக்குமதிப்பு 7,*

*தமிழக எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு, 176 புள்ளிகளாகும்,*

*இதன்படி 776 எம்.பி-க்களின் ஒட்டு மொத்த வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும்,*

*நாட்டில் உள்ள ஒட்டுமொத்த 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5லட்சத்து49ஆயிரத்து474 ஆகும்,*

*தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களின்வாக்குகளின் மதிப்பு 41 ஆயிரத்து 184 என்பது குறிப்படத்தக்கது,*

*50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுவார்,*

*(5,49,408+5,59,474=10,98,882)மொத்தமுள்ள 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 வாக்குகளில்,*

*5 லட்சத்து 49 ஆயிரத்து 442 bv வாக்குகள் பெறுவோர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்,*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக