ஞாயிறு, 3 ஜூன், 2018

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு அதிகரிப்பு. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி...

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு அதிகரிப்பு. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி...

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அவர்களுக்கு குரூப்-1 தேர்வு பற்றிய விழிப்புணர்வு காலதாமதமாகவே ஏற்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தேர்வுக்கு தயாராகி முயற்சிக்கும்போது வயது வரம்பு கடந்துவிடுகிறது.

எனவே, இதர மாநிலங்களில் இருப்பதைப் போல் தேர்வுக்கான வயது வரம்பை 45-ஆக உயர்த்த வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வயது வரம்பை தளர்த்த வேண்டும் எனவும் தமிழக இளைஞர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆண்டுதோறும் திட்டமிட்டபடி ஐ.ஏ.எஸ் தேர்வை நடத்தி வரும் யு.பி.எஸ்.சி வயது வரம்பை 37-ஆக உயர்த்தி இருக்கும்போது தமிழக அரசும் கிராமப்புற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வயது வரம்பை 45-ஆக தளர்த்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி எழுதும் எஸ்.சி எஸ்.டி மற்றும் மற்ற பி.சி பிரிவினருக்கு வயது வரம்பு 35 லிருந்து 37 வயதாகவும், பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை  110 அவசர விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 
இது இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக