சனி, 17 நவம்பர், 2018

புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்? புயல்களும் அதன் பெயர்களும் !


கஜா புயல் :-

 புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்?
புயல்களும் அதன் பெயர்களும் !

*புயல் என்றவுடன் அனைவர்* *மனதிலும் தோன்றக்கூடிய* *ஒரே கேள்வி அந்த புயலின்* *பெயர் என்ன? என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும், வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின்* *பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது?* *இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை?* *இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்*

*புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?*

*வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்*

*மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.*

*யார் முதலில் பெயர் வைத்தது?*

*இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.*

*ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.*

*பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.*

*எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?*

*வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.*

 *இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.*

*இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !*

*🍋2005 டிசம்பர் - பானூஸ்*
*🍋2008 நவம்பர் - நிஷா*
*🍋2010 நவம்பர் - ஜல்*
*🍋2011 டிசம்பர் - தானே*
*🍋2012 அக்டோபர் - நீலம்*
*🍋 2013 டிசம்பர் - மடி புயல்*
*🍋 2015 டிசம்பர் - நாடா*
*🍋 2016 டிசம்பர் - வர்தா*
*🍋 2017 நவம்பர் - ஒகி*
*🍋 2018 நவம்பர் - கஜா*

*கஜா புயல் :-*

*தமிழகத்தை புரட்டிப் போட வரும் புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக