திங்கள், 3 பிப்ரவரி, 2020

பட்ஜெட் 2020: முக்கிய அம்சங்கள்

பட்ஜெட் 2020: முக்கிய அம்சங்கள்

புதுடில்லி : பட்ஜெட் 2020ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
* 100 மாவட்டங்களில் குடிநீர் வசதியில் கவனம்
* 20 லட்சம் விவசாயிகளுக்க சோலார் பம்புகள் அமைத்து தரும் திட்டம்
* விவசாயிகளுக்கு வசதிக்காக வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல கிஷான் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்க உள்ளது.
* வேளாண் விளை பொருட்களுக்கு கிரிஷி உதான் திட்டம்
* 2020 ல் ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு
* மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம்
* விவசாயம் மற்றும் நீர்பாசனத்திற்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
* ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2020-21 ல் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு
* விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு திட்டம்
* தரமான உயர்கல்வி வழங்க நடவடிக்கைகள்
* 150 பல்கலை.,களில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும்.
* நாட்டின் டாப் 100 கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறும் வசதி.
* இந்தியாவில் கல்வி கற்க INDSAT திட்டம்
* மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி திட்டம்
* உ.பி.,யில் தேசிய போலீஸ் பல்கலை., அமைக்கப்படும்.
* கல்வித்துறைக்கு ரூ.99300 கோடி ஒதுக்கீடு
* திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3000 கோடி
* 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களில் மலிவு விலையில் மருந்து விற்க அரசு மருந்தகம் அமைக்கப்படும்.
* ஜன் யோஜனா திட்டத்திற்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு
* எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம். மொபைல் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க புதிய திட்டம்.
* தேசிய ஜவுளி திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு
* தொழில் மற்றும் வர்த்தக துறையை ஊக்குவிக்க ரூ.27,300 கோடி
* நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* தேசிய கட்டமைப்பிற்கு ரூ.103 லட்சம் கோடி
* பெரிய மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவ கல்வி வழங்க அனுமதி
* ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை
* 2000 கி.மீ., தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை
* 11000 கி.மீ., ரயில் வழித்தடங்களை மின்மயமாக்க இலக்கு
* தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிதாக கொண்டு வரப்படும்.
* 2024 க்குள் 100 புதிய விமான நிலையங்கள்.
* குறைந்த ப்ரீமியத்தில் காப்பீட்டு திட்டம்
* தனியார்-அரசு பங்களிப்புடன் 150 ரயில்கள் இயக்க திட்டம்
* போக்குவரத்து கட்டமைப்பிற்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
* மின் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்ற துறைக்கு ரூ.22,000 கோடி
* ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்.
* தேசிய சரக்கு மேம்பாட்டு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* டேட்டா சென்டர் பார்க்குகள் அமைப்பதற்கான கொள்கை விரைவில் கொண்டு வரப்படும்.
* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும். இதற்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு
* 2 தேசிய அளவிலாக அறிவியல் திட்டம்
* ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.
* மேலும் 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள்
* மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு ரூ.9000 கோடி
* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்கு ரூ.85,000 கோடி
* மேலும் 4 அருங்காட்சியகங்கள் புதுபிக்கப்படும்.
* தொல்லியல் அகழ்வாராய்டு அருங்காட்சியங்கள். தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் , அஸ்தினாபுரம் உள்ளிட்ட 5 இடங்கள் தேர்வு.
* ராஞ்சியில் பழங்குடியின அருங்காட்சியகம்.
* உணவு ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி
* கலாச்சார துறைக்கு ரூ.3150 கோடி
* தூய்மை காற்று திட்டத்திற்கு ரூ.4400 கோடி
* தேசிய பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம்.
* ஜம்மு- காஜ்மீருக்கு ரூ.30,757 கோடி
* லடாக்கிற்கு ரூ.5988 கோடி
* 2022 ல் நடக்க உள்ள ஜி 20 மாநாடு ஏற்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கிடு
பட்ஜெட் 2020 ல் வரம்பு அதிகரிக்க அல்லது குறைக்கப்பட்டுள்ள விபரங்கள் :
* டிபாசிட் இன்சூரன்ஸ் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்புவருமான வரி விகிதங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.
நடுத்தர மக்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி விகிதம், குறைக்கப்பட்டுள்ளது.
* ரூ.5 - ரூ.7.5 லட்சம் வருமானம் பெறுவோரின் வருமான வரி 10 சதவீதம் குறைக்கப்படும்.
* ரூ.7.5 - 10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
* 10 - 12.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
* ரூ.12.5 - 15 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.* ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக