திங்கள், 15 ஜூன், 2020

ஓர் ஆண்டின் மிக நீண்ட நாள்.. தெரிந்து கொள்வோம்..!!

 

ஓர் ஆண்டின் மிக நீண்ட நாள்.. தெரிந்து கொள்வோம்..!!

தெரிந்து கொள்வோம்..!!
💢 மகாராஷ்டிராவின் தலைநகரம் மும்பை ஆகும்.

💢 மும்பை என்ற பெயர் மும்பா தேவி என்ற தெய்வத்தின் பெயரில் இருந்து உருவானது.

💢 1959ல், இந்தியாவில் முதன்முதலாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

💢 1960ல் மும்பை, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

💢 டிசம்பர் 10ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

💢 இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளர் சுகுமார் சென் ஆவார்.

💢 உலகிலேயே மிகப்பழமையான உயிரியல் பூங்கா வியன்னாவில் உள்ள டைர்கார்டன் ஸ்கான்ப்ருன் (வுநைசபயசவநn ளுஉhழnடிசரnn) பூங்காவாகும்.

💢 உலகின் மிகப்பெரிய நூலகம் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், வாஷிங்டன் டி.சி. ஆகும்.


💢 ஓர் ஆண்டின் மிக நீண்ட நாள் ஜூன் 21 ஆகும்.

💢 இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் ஓஸ்போர்ன் ஸ்மித் ஆவார்.

💢 பிஹு, அஸ்ஸாமின் நாட்டுப்புற நடனம் ஆகும்.

💢 நேரு கோப்பை ஹாக்கியுடன் தொடர்புடையது ஆகும்.

💢 இந்தியாவின் முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன் அஜித் வாடேகர் ஆவார்.

💢 இந்தியாவின் ஒரே கண்ணாடி மசூதி ஷில்லாங், மேகாலயாவில் அமைந்துள்ளது.

💢 அசாமில் அமைந்துள்ள கோரக்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் மிக நீண்ட ரயில் நிலையம் ஆகும்.

💢 வெளிநாட்டு கிளை திறந்த முதல் இந்திய வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகும்.

💢 இந்தியாவின் முதல் வண்ண திரைப்படமான 'கிசான் கன்யா" 1937ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

💢 சர் எட்வின் லான்ட்சிர் லுடியன்ஸ் என்பவரால் ராஷ்டிரபதி பவன் வடிவமைக்கப்பட்டது.

💢 இந்தியாவில் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு ஆவார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக