வியாழன், 30 மார்ச், 2017

இலக்ணக்குறிப்பு

இலக்ணக்குறிப்பு

அணைந்த வாகீசர் - பெயரெச்சம்
அறிந்து, அடைந்து - வினையெச்சம்
வந்தவர் - வினையாலணையும் பெயர்
தீண்டிற்று - ஒன்றன்பால் வினைமுற்று
நோக்கி - வினையெச்சம்
பெருமையறிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை
தேசம் - இடவாகு பெயர்
மல்லலம் குருத்து - உரிச்சொற்றொடர்
அங்கணர் - அன்மொழித்தொகை
கேளா - செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
அறனறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
உற்றநோய் - பெயரெச்சம்
வன்மை - பண்புப்பெயர்
துணையார் - வினையாலணையும் பெயர்
அறனீனும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தன்ஒன்னார் - ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றேறி - ஏழாம் வேற்றுமைத்தொகை
திறனறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தேசம் - இடவாகு பெயர்
மல்லலம் குருத்து - உரிச்சொற்றொடர்
அங்கணர் - அன்மொழித்தொகை
கேளா - செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
அறனறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
உற்றநோய் - பெயரெச்சம்
வன்மை - பண்புப்பெயர்
துணையார் - வினையாலணையும் பெயர்
அறனீனும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தன்ஒன்னார் - ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றேறி - ஏழாம் வேற்றுமைத்தொகை
திறனறிந்து - – இரண்டாம் வேற்றுமைத்தொகை
உறாஅமை - செய்யுளிசை அளபெடை
ஒழுகுதல் - தொழிற்பெயர்
இல்லை - குறிப்பு வினைமுற்று
வந்த பொருள் - பெயரெச்சம்
வேந்தன் பொருள் - ஆறாம் வேற்றுமைத்தொகை
செய்க - வியங்கோள் வினைமுற்று
படர்ந்த தெண்டிரை - பெயரெச்சம்
நெடுநீர் - பண்புத்தொகை
வெள்ளெயிறு - பண்புத்தொகை
செவிபுக - ஏழாம் வேற்றுமைத்தொகை
வால்குழைத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
சிரமுகம் - உம்மைத்தொகை
நன்று நன்று - அடுக்குத்தொடர்
தடக்கரி - உரிச்சொற்றொடர்
கால் மடித்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பொதிந்தமெய் - பெயரெச்சம்
பூதரப்புயம் - உவமைத்தொகை
நனிமனம் - உரிச்சொற்றொடர்
மலரடி - உவமைத்தொகை
ஒழுகுதல் - தொழிற்பெயர்
பொழிதருமணி - வினையெச்சம்
நிதிதருகவிகை - வினையெச்சம்
கோல்நோக்கி - இரண்டாம் வேற்றுமைத்தொகை
வாழும்குடி - பெயரெச்சம்
பழச்சுவை - ஆறாம் வேற்றுமைத் தொகை
உயிர்த்திரள் - ஆறாம் வேற்றுமைத் தொகை
தொன்மக்கள் - பண்புத்தொகை
உரைகாலம் - வினைத்தொகை
தாள் தலை - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பெருகும் இன்பம் - என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
அறுகுளம், அகல்வயல் - வினைத்தொகை
கடாஅ - இசைநிறை அளபெடை
அவிழாக் கோட்டுகிர் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நீளிடை - வினைத்தொகை
சாஅய் - இசைநிறைஅளபெடை
பிரிந்தோர் - வினையாலணையும் பெயர்
மருள் - உவமவுருபு
நாட - அண்மைவிளி
வாழியர் - வியங்கோள் வினைமுற்று
அடங்காமை - எதிர்மறை தொழிற்பெயர்
அடங்கியான் - வினையாலணையும் பெயர்
உடைத்து - குறிப்பு வினைமுற்று
அடங்கல் - தொழிற்பெயர்
பொருட்டு - குறிப்பு வினைமுற்று
மற்றையான் - குறிப்பு வினையாலணையும் பெயர்
கடனறிகாட்சி - வினைத்தொகை
கேடு, கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
அருவினை - பண்புத்தொகை
அதனினூஉங்கு - இன்னிசை அளபெடை
பணிதல் - தொழிற்பெயர்
நன்று - பண்புப்பெயர்
தந்தபொருள் - பெயரெச்சம்
வாழ்வான் - வினையாலணையும் பெயர்
பெருந்தகை - பண்புத்தொகை
ஆதல் - தொழிற்பெயர்
ஒழுகல் - தொழிற்பெயர்
கருதுபவர் - வினையாலணையும் பெயர்
சுமக்க - வியங்கோள் வினைமுற்று
செல்வார் - வினையாலணையும் பெயர்
சாலமிகுந்து - உரிச்சொற்றொடர்
ஒடுக்கம் - தொழிற்பெயர்
ஒக்க - வியங்கோள் வினைமுற்று
அறியார் - எதிர்மறை வினையாலணையும் பெயர்
கொம்பர் - ஈற்றுப்போலி
வாழ்க்கை - தொழிற்பெயர்
பாவை - உவமை ஆகுபெயர்
கடிமிடறு - உரிச்சொற்றொடர்
எரிமலர் - உவமத்தொகை
விடுகணை - வினைத்தொகை
கழித்த வெள் - பெயரெச்சம்
தடங்கண் - உரிச்சொற்றொடர்
கமழ் ஓதி - அன்மொழித்தொகை
சிலைத் தொழில் - ஆறாம் வேற்றுமைத்தொகை
பவளச்செவ்வாய் - உவமைத்தொகை
செவ்வாய் - அன்மொழித்தொகை
திண்டேர் - பண்புத்தொகை
அண்ணா - உவமஉருபு
சுரந்து, முதிர்ந்து - வினையெச்சம்
காளை - உவம ஆகுபெயர்
மலைமுழை - ஏழாம் வேற்றுமைத்தொகை
அறிகிலார் - எதிர்மறை வினையாலணையும் பெயர்
மென்மலர் - பண்புத்தொகை
என்ன - உவமஉருபு
நினைத்தவர் - வினையாலணையும் பெயர்
வெருவி, கிழித்து - வினையெச்சம்
மதிமுகம் - உவமத்தொகை
வல்லுடல் - பண்புத்தொகை
மதி - உவம ஆகுபெயர்
வெவ்விடம் - பண்புத்தொகை
ஆகுக - வியங்கோள் வினைமுற்று
கனங்கணம் - அடுக்குத்தொடர்.

சமய முன்னோடிகள் :

சமய முன்னோடிகள் :

1.திருஞான சம்பந்தர், 2.திருநாவுக்கரசர், 3.சுந்தரர், 4.மாணிக்கவாசகர் பற்றிய  குறிப்புக்கள்:

* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.

* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.

* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

* 1,2,3ம் திருமுறைகள் -திருஞான சம்பந்தர் - தேவராம்.

* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.

* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.

* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.

* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்

* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.

* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.

* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.

* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.

* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.

* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.

* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.

* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.,

1.திருஞானசம்பந்தர்

* இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.

* தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

* திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.

* திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

* கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.

* திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.

* திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.

* பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.

* கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.

* மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.

* காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.

* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.

2.திருநாவுக்கரசர்

* திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.

* வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.

* திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர்

* சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

* முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.

* மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.

* என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.

* தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.

3.சுந்தரர்

* கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர். சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.

* வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.

* இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.

* சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.

* பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.

4.மாணிக்கவாசகர்

* மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.

* திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.

* மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி   என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.

* பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.

* மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.

* நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.

* ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்

* தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.

* வானாகி மண்ண

ாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.

* சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.

புதன், 29 மார்ச், 2017

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-

🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

🍣   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

🍲  மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது

🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan
● TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)

🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

🍫  பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

🍤 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்
*மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

புரட்சிகள்....

புரட்சிகள் :

* கருப்பு புரட்சி = பெட்ரோல் பொருட்கள்
* நீல புரட்சி = மீன் வளர்ப்பு
* பழுப்பு புரட்சி = தோல் பொருட்கள்
* தங்க இலை புரட்சி = சனல்
* தங்க புரட்சி = ஒட்டுமொத்த தோட்டகலை / தேன் வளர்ப்பு
* பசுமை புரட்சி = உணவு தானிய உற்பத்தி
* சாம்பல் புரட்சி = உரங்கள்
* pink புரட்சி = வெங்காயம்/இறால்/மருந்து உற்பத்தி
* வானவில் புரட்சி = விவசாய உற்பத்தி பெருக்கம்(அனைத்து பொருள்களும்)
* சிவப்பு புரட்சி = தக்காளி/இறைச்சி உற்பத்தி
* வட்ட புரட்சி = உருளை கிழங்கு உற்பத்தி
* வெள்ளி இலை புரட்சி = பருத்தி உற்பத்தி
* வெள்ளி புரட்சி = முட்டை உற்பத்தி
* வெள்ளை புரட்சி = பால் பொருட்கள்
* மஞ்சள் புரட்சி = எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
* அனைத்து பசுமை புரட்சி = சுற்றுசூழல் சீர்கேடு இல்லாமல் அணைத்து துறைகளின் உற்பத்தி பெருக்கம்.

கழுகு ஒரு பார்வை


கழுகு ஒரு பார்வை

சூரியனை நேருக்கு நேராக பார்க்கும் ஒரே பறவை கழுகு தான். கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும்.யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்றை விட இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால், ஹார்பி கழுகு என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.

கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.

திங்கள், 27 மார்ச், 2017

உலக மொழிகள்...

உலக மொழிகள் ...

உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது.

1.திராவிட மொழிகள்:
தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,கன்னடம்
2.இந்தோ ஐரோப்பா மொழிகள்
ஆங்கிலம்,யெர்மன்,டச்சு, ஸ்வீடிஷ்
3.ரொமானிய மொழிகள்
இத்தாலி,பிரெஞ்சு, போர்த்துகீசு,ஸ்பானியா
4.இந்தோ இரானிய
ரஷ்யன்,செக்,பல்கேரியா, உக்ரேன்,சமஸ்கிருதம்
5.சீனதிபேத்திய
பர்மா,சீனா,தாய்லாந்து, கொரியா
6.செமிடோ
7.ஆபிரிக்கா மொழிகள்
8.அமெரிக்கா, மேற்கிந்திய மொழிகள்
9.காகேசிய மொழிகள்
10.மலேயா பாலினேசியா மொழிகள்

இன்னும்பல மொழிகள் இருந்தாலும் 5 கோடிக்கு அதிகமான மக்கள் பேசும் மொழிகள் 13.

1.சீன மொழி-100 கோடி
2.ஆங்கிலம்-40 கோடி
3.ரஷ்யன்-22கோடி
4.ஸ்பானியா-20 கோடி
5.இந்தி-16 கோடி
6.ஜப்பானிஷ்-20 கோடி
7.டச்சு-16.5 கோடி
8.வங்காளம்- 10 கோடி
9.போர்த்துகீசு-9 கோடி
10.அரபு- 9 கோடி
11.பிரெஞ்சு-9 கோடி
12.இத்தாலி-6 கோடி
13.தமிழ்- 5-6 கோடி.

சனி, 25 மார்ச், 2017

Top 10 Oldest Languages in the World

Top 10 Oldest Languages in the World

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

நம் தமிழ் மொழியின் வயது பல யுகங்களாக இருந்தாலும்,  இன்றைய நவீன ஆராய்சியாளர்களின் கருத்துபடி, தமிழ் மொழியின் வயது 5000.
5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி நம் தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

ஆதி மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் தான்.

http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-world/

இந்த மெய்யான தகவலை பகிரவும்.

தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மரபியல் - மரபுப் பண்பு குறித்த அறிவியல்

மரபியல் - மரபுப் பண்பு குறித்த அறிவியல்...

1. DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர் - வாட்சன் மற்றும் கிரிக்

2. மனிதனில் எத்தனை மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன - 300க்கும் அதிகமான நோய்கள்

3. மனிதனில் மரபுப் பண்புகளைப் பற்றி அறிய உதவுவது - சந்ததி வழித் தொடர்

4. நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்

5. குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன - B தொகுதி

6. முதன் முதலில் ஜீனை குளோனிங் செய்து பெருக்கியவர்கள் - ஹெர்பர்ட் பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்

7. மரபுப் பொறியியலில் super bugs என குறிப்பிடப்படும் உயிரிகள் - மரபு பொறியியல் பாக்டீரியங்கள்

8. சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது - உடற்குரோமோசோமில் உள்ள ஜீன் திடீர் மாற்ற விளைவால்

9. மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய் - அண்டிங்ட்டன் கொரியா

10. இடியோகிராம் என்றால் என்ன - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

11. அல்பினிசத்திற்கான காரணம் - மெலானின் இல்லாமை

12. எந்தப் புரோகேரியாட்டில் அதிக அளவு மரபியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - எஸ்செர்சியா கோலை

13. மனிதனில், குரோமோசோம்கள் 6 முதல் 12 வரை, எந்த குரோமோசோம் தொகுதியில் உள்ளன - C தொகுதி

14. X குரோமோசோம் காணப்படும் குரோமோசோம் தொகுதி - தொகுதி - C

15.  Y குரோமோசோம் காணப்படும் குரோமோசோம் தொகுதி - தொகுதி - Y

வெள்ளி, 24 மார்ச், 2017

இந்திய வரலாறு ஆண்டுகள்.

இந்திய வரலாறு ஆண்டுகள்.

🏵பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
🏵இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களுர்
🏵வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்
🏵ஹைதர் அலி  மறைந்த ஆண்டு - 1782
🏵பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு - 1784
🏵காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்
🏵காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர் - சர்ஜான் ஷோர்
🏵பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு - 1786
🏵நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு - 1799
🏵சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர் - சுர்ஜி அர்ஜூன்கான்
🏵வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர் - வெல்லெஸ்லிபிரபு
🏵கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம் - மார்குயிஸ்
🏵வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ் - சமாச்சார் தர்பான்
🏵ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு - 1814
🏵1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது - நேப்பாளம்
🏵கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - சஹேளலி
🏵மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு - 1761
🏵தக்கர்களை ஒடுக்கிய மேஜர் - கர்னல் சீமன்
🏵இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835
🏵சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங்
🏵வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806
🏵ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை -இரட்டைபடி
🏵டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு - 1849
🏵எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள் - பஞ்சாப்
🏵பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு - 1853 🏵தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர் - ஓஷாகன்னசே
🏵நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர் - டல்ஹவுசி
🏵மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம் - டாக்கா
🏵மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு - கிராமம்
🏵ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்
🏵விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1855
🏵1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது - 10
சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது - 14
🏵ஹிடாகாரிணி சபையை அமைத்தவர் - அம்பேத்கார்
🏵மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835
🏵நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெல்.
🏵கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம் - இராமனாதபுரம்
🏵வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெகவீர பாண்டியன்
🏵கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடம் - கயத்தாறு
🏵பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி - மேஜர் பானர்மேன்
🏵வேலூர் கலகத்திற்கான காரணம் - புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்
🏵வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி - கர்னல் பான்கோர்ட்
🏵கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர் - மேஜர் கூட்ஸ்
🏵1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர் - வீர சவார்க்கர்
🏵1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம் - கொழுப்பு தடவபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்
🏵பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய் - மங்கள் பாண்டே
🏵பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார் - அலகாபாத்
🏵இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி -கிச்சனர் பிரபு
🏵இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங்பிரபு
நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1878