புதன், 1 மார்ச், 2017

TNTET' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு

'TNTET' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு
'ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட
மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக