TNPSC Online நடப்பு நிகழ்வுகள்..March 15 to 20.
TNPSC Online coaching.... 15,16 March நடப்பு நிகழ்வுகள்...
1) பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2) மும்பையின் முதல் மிதக்கும் ஓட்டலை பந்த்ரா- வொர்லி கடற்பகுதியை இணைக்கும் பாலத்தின் பின்னணியில் “ஏபி செலிஸ்டியல்” என்கிற மிதக்கும் ஓட்டல் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மிதக்கும் ஓட்டலை மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்துள்ளார்.
3) கெவின் கேர் நிறுவனத்திலிருந்து பிரை வேட் ஈக்விட்டி நிறுவன மான சைரஸ்
கேபிடல் நிறுவனம் வெளியேறியுள்ளது.
4) March --15 உலக நுகர்வோர் தினம் (World Consumer's Rights day)
2017 Theme: "Building a Digital World Consumers Can Trust"....
5) குழந்தை திருட்டை தடுக்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்
6) நேத்ரா அமைப்பு -- ரயில் பயணத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க.. அகச்சிவப்பு கதிர்,ரேடார் மூலம் இந்த அமைப்பு செயல்படும்
7) ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய துணை ஆளுநராக B.P. கனுங்கோ ( B.P. Kanungo ) நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும்.தற்போது துணை ஆளுநராக பதவி வகித்து வரும் R. காந்தி, ஏப்ரல் 03ல் ஓய்வு பெறுகிறார்....
8) MY STORY --- An Autobiography Written by Australian cricket player --- Micheal Clarke
9) NTPC -- National Thermal power corporation... இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி நிலையத்தை கேரளாவின் காயம்குளம் பகுதியில் நிறுவி உள்ளது...
10) MARCH 16 -- தேசிய தடுப்பூசி தினம்
11) தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு (ம) வழங்கல் 1968 ம் ஆண்டு வழங்கப்பட்டது.
12) ரூ. 50 க்கு ATM card -- தபால் துறை அறிவிப்பு... சேமிப்பு கணக்குக்கு 4% வட்டி
13) கிரிடிட் கார்ட் சைஸில் ஈ.சி.ஜி மெசினை டெலி ஈ.சி.ஜி (ம) மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
14) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட [ International Film Festival and Awards of Australia ] விழாவில் , SARBJIT படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய்க்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுளளது.
15) The Wrong Turn : Love and Betrayal in the Time of Netaji என்ற புத்தகத்தை சஞ்சய் சோப்ரா & நமிதா ராய் கோஸ் ஆகியோர் எழுத்தியுள்ளனர்.
16) From Inside the Steel Frame : The Memoirs of an Administrator என்ற புத்தகத்தை அசோக் பாண்டே எழுதியுள்ளார்.
17) மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்த நாள் 16 மார்ச் 2006.
18) இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நியமனம்.
19) ஜூன் 2017-ல் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் ICC பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதராக சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கமிட்டி நியமித்துள்ளது
20) சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, போடி அருகே துரைராஜபுரம் காலனி, மரக்காமலை மலை அடிவாரத்தி ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாழிகளில் அலைகள் போன்ற சின்னங்களும், னீ என்ற குறியீடும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
21) மாநில ஹாக்கி: இந்தியன் வங்கி சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு ஹாக்கிப் போட்டியில் இந்தியன் வங்கி சாம்பியன் பட்டம் வென்றது.
TNPSC Online coaching 17,18 நடப்பு நிகழ்வுகள்...
1) சியரா லியோன் நாட்டின் கிழக்கு பகுதியில் 706 காரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் உள்ள பெரிய வைரங்களில் 10வது பெரிய வைரம் இது.சியரா லியோனில், வைரம் மிகுந்த கோனா பகுதியில், இந்த வைரத்தை இமானுவேல் மோமோக் என்பவர் தோண்டியெடுத்தார்.
அதிபர் எர்னஸ்ட் பய் கொரோமோ பார்வையிட்ட பின் வைரம் மத்திய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
2) அமெரிக்க சுகாதார காப்பீட்டு ஆணையத்தின் தலைவராக இந்திய பெண் சீமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
3) அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் திறமை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி இந்திராணி தாஸ் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதையும் சுமார் ரூ.1.65 கோடி மதிப்பிலான பரிசு தொகையும் பெற்றார்..
3) பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் உடலின் அசைவுகளை வைத்து இரத்த அழுத்தம் கண்டறிய ஒரு புதிய சென்சாரை உருவாக்கியுள்ளனர்
4) இந்திய-ரஷிய இருநாட்டு வர்த்தகத்தை ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
5) டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக வெள்ளையன் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
6) ஹரியானா மாநில அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புனித யாத்திரை செல்வதற்கு ஏதுவாக தீர்த்த தரிசன யாத்திரை எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
7) குஜராத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே , பரூச் (Bharuch) மற்றும் அங்கிலேஷ்வர் (Ankleshwar) நகரை இணைக்கும் வகையில் 1344 மீட்டர் நீளமுள்ள ஆசியாவின் மிக நீளமான கம்பி வட பாலத்தை [Cable Bridge] பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
8) பஞ்சாபின் 26வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அம்ரிந்தர் சிங் பதவியேற்றுக்கொண்டார்.
9) ஒவ்வொரு ஆண்டும் உலக தூக்க தினம் மார்ச் மாதத்தில் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை (மார்ச் 17)கடைப்பிடிக்கப்படுகிறது
10) 2017-- National Theatre
Festival -- திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது...
11) "So You Want to Know About the Environment" எனும் நூலின்ஆசிரியர் -- பிஜால் வச்சரஜனி. ...
12) 'When Breath Becomes Air‛ என்ற நூலின் ஆசிரியர் -- பால் கலாநிதி
13) Women in Politics Map 2017 எனும் பட்டியலில் இந்தியா 148வது இடத்தில் உள்ளது....
14) “Indica: A Deep Natural History of the Indian Subcontinent” எனும் புத்தகத்தின் ஆசிரியர் --- Pranay Lal
15) 1965ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத், 2 விண்கலத்தில் சென்று விண்வெளியில் 12 நிமிடங்கள் நடமாடிய முதல் மனிதர் ஆவார்.
16) அ.தி.மு.க. சார்பில் “அம்மாவின் அரண்” என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது...
17) SAI -- Sports Authority Of India
18) ஆந்திர மாநிலம் , விஜயவாடாவில் அமைந்துள்ள ஞானவரம் விமான நிலையத்தை – நந்தமூரி தாரக ராமாராவ் – அமராவதி விமான நிலையம் எனவும்,திருப்பதி விமான நிலையத்தை – ஶ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
19) மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் கடந்த மார்ச் 16-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக ஜாய் குமாரும் மற்றும் 7 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா இவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
20) கோல்டா மெயர் -- இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரான நாள் 17 மார்ச் 1969.
TNPSC ONLINE COACHING 19,20 MARCH நடப்பு நிகழ்வுகள்
1) வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் தங்கள், அன்றாட கடமைகளை நிறைவேற்ற உதவி புரியும் வகையிலான CHINTU என பெயரிடப்பட்ட இயந்திர மனிதனை,புனேவை சேர்ந்த Maharashtra Institute of Technology (MIT), IBM நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
2.பீகாரின் ராஜ்கிர் நகரில் ( நாளந்தா மாவட்டம் ) சர்வதேச புத்த மத மாநாடு மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டை புத்த மத தலைவர் தலாய் லாமா தொடங்கி வைத்தார்.
3) உலகின் 10வது பெரிய வைரம், சியரா லியோன் நாட்டின் கிழக்கே கோனா பகுதியில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இது 706 காரட் மதிப்பு கொண்டது.இந்த வைரத்தை இமானுவேல் மோமோக் என்பவர் தோண்டியெடுத்து, அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
4) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் MY STORY என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
5) இணையதள வசதியை மனிதனின் அடிப்படை உரிமையாக்கிய முதல்மாநிலம் கேரளா
6) ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் நடைப் போட்டியில் இந்திய வீரர் கே.டி.இர்ஃபான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7) இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சியாளராக, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பயிற்சியாளர் குழு துணைத் தலைவரும், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவருமான சான்டியாகோ நீவா பொறுப்பேற்க உள்ளார்.
8) சர்வதேச கபடி இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின.மொரீஷியசில் நடந்த இறுதிப் போட்டியில் அந்தோணியம்மாள் தங்கப்பதக்கம் வென்றார். இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சோழபாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
9)குழந்தைகளுக்கு விமான தொழில்நுட்பத்தை கற்று தரும் சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீமதி கேசனுக்கும் சிங்கப்பூரில் தலைசிறந்த மகளிர் விருது வழங்கப்பட்டது.
இந்திய ராணுவத்தில் பல ஆண்டுகள் சேவையாற்றிய வந்தனா சர்மாவுக்கும் தலைசிறந்த மகளிர் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
தலைசிறந்த மகளிர் விருது
ரேவதி சித்தார்தே ராய் என்பவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.இவர் 2007-ல் ஆசியாவின் முதல் மகளிர் டாக்ஸி சேவையை தொடங்கினார்.
10) நிலக்கரிக்கும் தரச் சான்று வழங்கும் நடைமுறை விரைவில் வர உள்ளது. நிலக்கரித்துறை கட்டுப்பாட்டாளர் அஞ்சனி குமார்...
11) டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
12) உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை வித்யா பிள்ளை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
13)பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக ஐ.நா. சபையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வரும் தெமினா ஜன்ஜுவா நியமிக்கப்பட்டுள்ளார்.தெமினா ஜன்ஜுவா பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு செயலாளர் ஆவார்.
14) காதுகளுக்கான அறுவை சிகிச்சையை ரோபோட்டை வைத்து செய்யும் முறையை சுவிட்சர்லாந்து நாட்டில் பெரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் Stefan Weber என்பவர் அறிமுகம் செய்துள்ளார்.
15) சர்வதேச மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
16) ஒவ்வொரு ஆண்டும் உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
17) பிஹார் மாநிலத்தில் உள்ள நாளந்தா திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 97 வயதில் எம்ஏ படிக்கும் முதியவர் ராஜ்குமார் வைஷ்யா, நாட்டிலேயே மிக வயதான மாணவர் என்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
18) அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரின் பொதுப்பணி மற்றும் பொறியியல் துறையின் புதிய இயக்குநராக இந்திய பொறியாளர் கருண் ஸ்ரீராமா நியமிக்கப்பட்டுள்ளார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக