வியாழன், 30 மார்ச், 2017

சமய முன்னோடிகள் :

சமய முன்னோடிகள் :

1.திருஞான சம்பந்தர், 2.திருநாவுக்கரசர், 3.சுந்தரர், 4.மாணிக்கவாசகர் பற்றிய  குறிப்புக்கள்:

* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.

* சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.

* சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

* 1,2,3ம் திருமுறைகள் -திருஞான சம்பந்தர் - தேவராம்.

* 4,5,6ம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் - தேவாரம்.

* 7ம் திருமுறை - சுந்தரர் -தேவாரம்.

* 8ம் திருமுறை - மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார்.

* 9ம் திருமுறை - திருமாளிகைத் தேவர் உட்பட்ட 9 நபர்கள்

* 10ம் திருமுறை - திருமலர் - திருமந்திரம்.

* 11ம் திருமுறை - திரு ஆலவாய் உடையார் உட்பட்ட 12 நபர்கள்.

* 12ம் திருமுறை - சேக்கிழார் - பெரிய புராணம்.

* திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாணடார் நம்பி. நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே. நம்பியாண்டார் நம்பிக்குப் பின் சேர்ந்தது பெரிய புராணம்.

* முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் மூவர் முதலிகள் எனப்படுவர்.

* திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும் சமயக் குரவர்கள் என்று அழைப்பர்.

* குரவர் என்பதற்கு பெரியவர்கள் என்று பொருள்.

* சைவர்களின் தமிழ் வேதம் பன்னிரு திருமுறைகள்.,

1.திருஞானசம்பந்தர்

* இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக்க குறிப்பிடப்படுபவர்.

* தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

* திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.

* திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

* கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.

* திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.

* திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.

* பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.

* கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.

* மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.

* காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.

* நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.

2.திருநாவுக்கரசர்

* திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.

* வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.

* திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.

* திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார். இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர்

* சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

* முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.

* மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்.

* என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்.

* தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - திருநாவுக்கரசர்.

3.சுந்தரர்

* கைலாயத்தில் இவருக்கு ஆலால சுந்தரனார் என்று பெயர். சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலூர்.

* வன் தொண்டர், தம்பிரான் தோழர் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.

* இறைவனையே மனைவியிடம் தூது அனப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.

* சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் திருவெண்ணெய் நல்லூர்.

* பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா - சுந்தரர்.

4.மாணிக்கவாசகர்

* மாணிக்கவாசகர் இயற்பெயர் தெரியவில்லை. எனினும் சிலர் திருவாதவூரார் என்கின்றனர்.

* திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை இயற்றி உள்ளார்.

* மாணிக்கவாசகர் பொருட்டே இறைவன் நரியைப் பரியாக்கினார். இவர் பொருட்டே வந்தி   என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.

* பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார் என்பது மரபு.

* மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படுகிறது.

* நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்.

* ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி - மாணிக்கவாசகர்

* தென்நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி - மாணிக்கவாசகர்.

* வானாகி மண்ண

ாகி, ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* அம்மையே அப்பா ஒப்பிலா மணியே - மாணிக்கவாசகர்

* திருவாசகத்திற்கு உருகாதர் ஒரு வாசகத்திற்கும் உருகார் - பழமொழி.

* சைவவேதம் எனப்படுவது திருவாசகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக