அடுக்குத் தொடர், இரட்டை கிளவி, இனங்குறித்தல், மரபு, வழு மற்றும் வழுவமைதி பற்றிய தகவல்கள் :-
*1. அடுக்கு தொடர்:-*
💢 ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு வரை அடுக்கி வருவது - அடுக்குத் தொடர்
💢 இது பிரித்தால் பொருள் தரும்
💢 இது விரைவு, வெகுளி, மகிழ்ச்சி, அச்சம் போன்ற பொருள்களை உணர்த்தும்
(எ.கா.) ஓடு ! ஓடு! (விரைவு)
ஒழிக ! ஒழிக ! (வெகுளி)
வாழ்க ! வாழ்க ! (மகிழ்ச்சி)
பாம்பு ! பாம்பு ! (அச்சம்)
*2. இரட்டை கிளவி:-*
💢 பிரிக்க இயலாது, பிரித்தால் பொருள் தராத, ஒலிக்குறிப்புகளாக வரும் சொல் - இரட்டை கிளவி
(எ.கா.) மரம் *சட சட* என முறிந்தது
வள்ளி *கல கல* என சிரித்தால்
*3. இனங்குறித்தல்:-*
💢 ஒரு சொல் அதன் பொருளை மட்டும் குறிக்காமல், அதற்கு இனமானவற்றையும் சேர்த்து குறிப்பது - இனங்குறித்தல்
(எ.கா.) சோறு உண்டான்
இவ் எடுத்துக்காட்டில் சோற்றுக்கு இனமான காய், கறி முதலியவற்றையும் சேர்த்து குறித்தது
*4. மரபு:-*
💢 எப்பொருளை எச்சொல்லால் முன்னோர் வழங்கினரோ, அங்ஙனமே அப்பொருளை அச்சொல்லாலேயே வழங்குவது - மரபு
(எ.கா.) சிங்கக் குருளை, பாம்புப் பறழ்
*5. வழு:-*
💢 வழு என்றால் குற்றம் என்று பொருள்
💢 வழுக்கள் வகைகள் - 7
1. திணை வழு
2. பால் வழு
3. இட வழு
4. கால வழு
5. வினா வழு
6. விடை வழு
7. மரபு வழு
*6. வழுவமைதி:-*
💢 வாக்கிய அமைப்புகள் திணை, பால், இடம், காலம், மரபு போன்றவற்றுடன் மாறி வழுவாக இருப்பினும், அவற்றை சான்றோர் அமைதியாக கொள்வர் அதுவே - வழுவமைதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக