செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - திரைப்படக்கலை

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - திரைப்படக்கலை

1. சென்னையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை நிறுவப்பட்ட ஆண்டு - 1939

2. தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் எது - காளிதாஸ்

3. தென்னிந்தியாவின் முதல் திரைப்படமான கீசக வதம் என்ற சலனப் படம் எப்போது வெளியிடப்பட்டது - 1916

4. தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான வார இதழ் - அம்யூஸ்மென்ட் வீக்லி

5. சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பைப் பெற்றவர் - கே.பி.சுந்தராம்பாள்

6. இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு -------------------- விருதுகள் வழங்கப்படுகின்றன - பிலிம்பேர் விருதுகள்

7. இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு எத்தனை சட்டங்கள் தேவைப்படுகின்றன - 24

8. திரைப்படக்கருவி உருவாக்கப்பட்ட ஆண்டு - 1894

9. முப்பரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக ---------------------- மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன - மாயா மென்பொருள்

10. ஒளிப்படக்காட்டி, அச்சுப்பொறி, புகைப்படக்கருவி ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவி - திரைப்படக்கருவி

11. திரைப்படக்கருவியை உருவாக்கியவர்கள் - லூமியர் சகோதரர்கள்

12. இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக ----------------------- மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன - பிளாஷ மற்றும் டுன்பூம்

13. ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றவர் - எட்வர்டு மைபிரிட்சு

14. படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் - ஈஸ்ட்மன்

15. கணினியில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான நிகழ்படக் கருவி - இணையப் படக்கருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக