வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

பாரதியாரின் வாழ்க்கைப் பயணம் பற்றிய செய்தித் துளிகள் !



பாரதியாரின் வாழ்க்கைப் பயணம் பற்றிய செய்தித் துளிகள் !


🌀 நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடி என்று அழைக்கப்படும் கவிஞர் இவர்.

🌀 வ.ரா.(ராமசாமி ஐயங்கார்)என்பவர் பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை கொடுத்தார்.

🌀 கல்கி என்பவர் பாரதி சங்கத்தைத் தோற்றுவித்தார்.

🌀 தன் பு னு}லை கனகலிங்கம் (புதுச்சேரி) என்பவருக்கு அணிவித்தார்.

🌀 பக்கீம் சந்திரரின் வந்தே மாதரம் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்து சக்கரவர்த்தினி இதழில் வெளியிட்டவர்.

🌀 இந்திய விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்த கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

🌀 1897 ல் செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்தார்.

🌀 விவேகபானு இதழில் தனிமை இரக்கம் என்னும் பாடல் முதன்முதலில் அச்சேறியது.

🌀 பாரதியின் ஞானகுரு நிவேதிதா தேவி.

🌀 பாரதியின் முதல் நு}லான ஸ்வதேச கீதங்கள்(1908)ல் அச்சில் ஏறியது.

🌀 மக்கள் மனதில் தம் எழுத்துக்களின் வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.

🌀 தம் பாடல்கள் மூலம் பெண்ணடிமையை அகற்ற ஓங்கி குரல் கொடுத்தவர்.

🌀 பாரதியின் பிறநு}ல்கள் : புதிய ஆத்திச்சு டி, நவரத்தினக்கதைகள், சின்னச்சங்கரன் கதை, விநாயகர் நான்மணிமாலை.

🌀 பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.

🌀 வி.கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் பாரதியின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டார்.

🌀 தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, அரபு முதலான பலமொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

🌀 பாரதியின் நினைவுசின்னம் : எட்டயாபுரத்தில், 1000 நபர்கள் அமரக்கூடிய பாரதி மணிமண்டபம் அமைந்துள்ளது.

பாரதியின் புகழுரைகள் :

🌀 பாரதியார் ஒருஅவதார புருஷர், இவர் நு}லைத் தமிழர் வேதமாகக் கொள்ள வேண்டும் - பரலி சு.நெல்லையப்பர்.

🌀 பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும். இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்- நாமக்கல் கவிஞர்.

மேற்கோள் :

🌀 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்குங் காணோம்

🌀 சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத்தொழுது படித்திடடி பாப்பா

🌀 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்

🌀 சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்

🌀 புண்ணியங்கோடி ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்

🌀 தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்
சகத்தினை அழித்திடுவோம்

🌀 காக்கை குருவி எங்கள் சாதி - நீல்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

🌀 தருமத்தின் வாழ்வுதனைச் சு து கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்

🌀 செந்தமிழ் நாடென்ற போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக