செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பரிவர்த்தனை தகவல்களும் வருமான வரித்துறையும்!

பரிவர்த்தனை தகவல்களும் வருமான வரித்துறையும்!

🌀 நீங்கள் செய்யும் இந்த 10 பரிவர்த்தனை தகவல்களும் வருமான வரித் துறையினருக்கு சென்றுவிடும் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் அனைத்து வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும்.

🌀 வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்தல், பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குதல், அசையா சொத்துப் பரிவர்த்தனை விவரங்கள், டெர்ம் டெபாசிட்கள், மியூச்சுவல்ஃபண்டுகள், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை போன்ற பல விவரங்கள் இதில் அடங்கும்.

🌀 30 லட்சத்துக்கும் அதிகமான விலையில் அசையா சொத்துக்கள் வாங்கும் போதும்,

🌀 தனிநபர் ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஏதேனும் பணப் பரிவர்த்தனை அல்லது பொருள் வாங்குவதும்,

🌀 ஒரு நிதி ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பணப் பரிவர்த்தனை செய்வதும்,

🌀 ஒரு நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையைப் பண டெபாசிட்டாகவோ, பணம் எடுப்பது போன்றவற்றை நடப்புக் கணக்குகளில் செய்யும் போதும்,

🌀 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஏதேனும் பரிவர்த்தனையை வங்கி டிராப்ட்டுகள் மூலம் செய்யும் போதும்,

🌀 தனிநபர் ஒருவர் பங்குச் சந்தை, பத்திரங்கள், மியூச்சுவல்ஃபண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்வதும்,

🌀 எந்த ஒரு கிரெடிட் கார்டு பேமெண்ட்களும் 2 லட்சத்திற்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்யும் போதும்,

🌀 தங்கம் மீதான ஃபண்டுகளில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதும்,

🌀 முதலீட்டாளர் ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் செய்யும் போதும்,

🌀 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டாளர் ஒருவர் முதலீடு செய்யும் போதும்,

🌀 மேற்கண்ட 10 பரிவர்த்தனைகளை பற்றிய தகவல்கள் அனைத்தும் பெறுவதற்காகவே வருமான வரித் துறையினர் படிவம் 61ஏ என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது. தனி நபர்கள் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் எல்லாம் செய்யும் போது அதனைத் தவறாமல் வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட வேண்டும்.

🌀 ஒருவேலை வரி தாக்கலின் போது பின் வரும் விவரங்களை எல்லாம் நீங்கள் குறிப்பிட மறந்தால் வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டிஸ் பெற வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக