TNPSC-TET - பொது அறிவு - இந்திய அரசியல் - உள்ளாட்சி அரசு
1. ஆங்கில ஆட்சியாளர் ---------------- என்பவர் உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார். - ரிப்பன் பிரபு
2. நாட்டின் தொலைதூரத்தில் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதற்கே ----------------- நிர்வாக அமைப்புகள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. - உள்ளாட்சி
3. ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அமைப்புகள் மக்கள் பிரநிதிகளுடன் செயல்படுகின்றன. இந்த அமைப்பிற்கு ------------- என்று பெயர். - உள்ளாட்சி நிர்வாகம்
4. உள்ளாட்சியின் இரு வகைகள் - கிராமப்புற உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி
5. கிராமப்புற உள்ளாட்சியில் ---------------------- ஆகியவை அடங்கும். - ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி
6. நகர்ப்புற உள்ளாட்சியில் --------------- ஆகியவை அடங்கும். - பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி
7. ------------- மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. - பத்தாயிரம்
8. பேரூராட்சியின் நிர்வாகத்தை -------------------- கவனித்துக் கொள்கின்றார். - செயல் அலுவலர்
9. ஓர் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் ---------------- ஆகச் செயல்படுகின்றன. - நகராட்சிகள்
10. நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் - ஐந்தாண்டுகள்
11. நகராட்சியின் நிர்வாக அலுவலர் --------------- ஆவார். - நகராட்சி ஆணையர்
12. பல இலட்சம் மக்கள் தொகையும், பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ள பகுதிகளை ----------- எனச் சொல்கிறோம். - மாநகராட்சி
13. மாநகராட்சித் தலைவர் ----------------- எனப்படுகிறார். - மேயர்
14. மாநகராட்சியின் நிர்வாக அலுவலர் -------------- எனப்படுகிறார். - ஆணையர்
15. மாநகராட்சித் தலைவர், உறுப்பினர் ஆகியவர்களின் பதவிக்காலம் -------------- ஆகும். - ஐந்து ஆண்டுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக