TNPSC நடத்தும் VAO தேர்வுக்கு தயாராவது எப்படி?
கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தயாராவது எப்படி?
என்ன பாடத்திட்டம்?
கேள்வித்தாள் எப்படி அமையும்?
எந்த பாடப்பகுதிகளை படிக்க வேண்டும்?
அதில் இருந்து கேள்விகள் எப்படி கேட்கப்படலாம்?
தேர்வில் கேள்விகள் எப்படி அமைந்திருக்கும்?
என்பது உள்பட உங்களது பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த மாதிரி வினா விடை பகுதி அமைந்திருக்கும்.
முதலில் நாம் எந்த தேர்விற்கு தயார் ஆனாலும் அத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் தேர்வுமுறையையும் அறிந்திருக்க வேண்டும்.
பாடத்திட்டம்
கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான பாடத்திட்டம் பற்றிய விவரம் பின்வருமாறு:
1. எழுத்துத்தேர்வு (கொள்குறி வகை) = 300 மதிப்பெண்கள்
இத்தேர்வில் பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களும் திறனறி தேர்வில் 20 வினாக்களும் கிராம நிர்வாகம் தொடர்பாக 25 வினாக்களும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 கேள்விகளும் ஆக மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண்கள் வீதம் (200x1½) 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் பொது அறிவுக்கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குள்ள சிறப்புகள்:-
1 மிக எளிமையான வழியில் அரசு துறையில் நுழைவதற்கு இத்தேர்வு வழி வகுக்கிறது.
2 பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே இத்தேர்வு எழுதுவதற்கான தகுதியாக இருப்பதால் அனைத்து தரப்பு மாணவர்களும் இதில் பங்கேற்க முடியும்.
3 குறைந்தபட்ச பொது அறிவு திறனும் பத்தாம் வகுப்பு கல்வி தரத்தில் கேள்விகளும் இடம்பெறுவதால் பட்டப்படிப்பு மாணவர்களும் முதுகலை மாணவர்களும் இதில் எளிதாக வெற்றி பெற முடியும்.
4 குறிப்பாக இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் (70 சதவீதம்) 10-ம் வகுப்பு கல்வி தரத்தில் இடம் பெறுவதால் பள்ளி பாட புத்தங்கள் பெரிதும் உதவும்.
தேர்விற்கான பாடத்திட்டம் பின்வருமாறு:-
பொது அறிவு
அலகு – 1
பொது அறிவியல் (General Science)
1. இயற்பியல் (Physics)
2. வேதியியல் (Chemsitry)
3. தாவரவியல் (Botany)
4. விலங்கியல் (Zoology)
அலகு – 2
பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் : (General Knowledge and Current Affairs)
அலகு – 3
புவியியல்: (Geography)
1. புவியியல் கோட்பாடுகள் (Geographical Theory)
2. இந்திய புவியியல் (Indian Geography)
3. தமிழ்நாட்டு புவியியல் (Geography of TamilNadu)
அலகு – 4
இந்திய வரலாறு மற்றும் பண்பாடு
1. பழங்கால வரலாறு (Ancient India)
2. இடைக்கால வரலாறு (Medieval India)
3. தற்கால வரலாறு (Modern India)
4. இந்திய பண்பாடு (Indian Culture)
அலகு – 5
இந்திய அரசியலமைப்பு (Indian Polity)
அலகு – 6
பொருளாதாரதம் (Economy)
1. இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)
2. தமிழ்நாட்டுப் பொருளாதாரம் (Tamil Nadu Economy)
அலகு – 7
இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement)
1. 1857 – பெருங்கிளர்ச்சி (1857 Revolt)
2. இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress)
3. தேசிய தலைவர்கள் எழுச்சி (Emergence of National Leaders)
4. சுந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு (Role of TamilNadu in Freedom Struggle)
அலகு – 8
அறிவுக்கூர்மை காரணமறிதல் மற்றும் கணிப்பொறி அறிவு
(Mental Ability, Reasoning and Computer Awareness)
1. புள்ளியியல் (Statistics)
2. அறிவுக்கூர்மை – சதவீதம் மீ.சி.ம மீ.பெ.வ விகிதம் மற்றும் வீதம் தனிவட்டி கூட்டுவட்டி நேரம் மற்றும் வேலை அளவியல்
3. தர்க்க முறையில் காரணமறிதல் (Logical reasoning) – கனசதுரம் பகடை சம்பந்தமான கேள்விகள் திசை அறிதல் (Coding and decoding) எண்வரிசைகள் எழுத்து மற்றும் எண் சம்பந்தமான கேள்விகள் இரத்த உறவு தொடர்பான கேள்விகள் கொடுக்கப்பட்ட படத்தில் விடுப்பட்ட எண்ணைக் கண்டறிதல் (Visual Reasoning)
அலகு – 9
கிராம நிர்வாகம் – பாடத்திட்டம்
கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பாக 25 வினாக்கள் கேட்கப்படுகின்றன. அவற்றிற்கான பாடத்திட்டம் பின்வருமாறு:
1.கிராமம் மற்றும் வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணிகள் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
(அ) காவல்துறை சம்பந்தமான கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள்
(ஆ) பிறப்பு இறப்பு சான்று சம்பந்தமான பணிகள்
(இ) அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது பற்றிய விவரங்கள்
(ஈ) பட்டா சாதிச்சான்று ஆதரவற்ற விதவை சம்பந்தமான விவரங்கள்
2.கிராம நிர்வாக அலுவலர் கையாளும் ‘அ’ பதிவேடு பட்டா
மற்றும் சிட்டா அடங்கல் பற்றிய விவரங்கள்.
3.ஒவ்வொரு பசலி ஆண்டு முடிவிலும் கிராம நிர்வாக அலுவலர்
பராமரிக்கும் கணக்குகள் பற்றிய விவரங்கள்.
4.நில வகைப்பாடு பற்றிய அடிப்படை விவரங்கள்
5.நிலங்களுக்கான ஆண்டுத் தீர்வை நிர்ணயம் பற்றிய விவரங்கள்.
6.நீர்ப்பாசன வகைகள் பற்றிய அடிப்படை விவரங்கள்
7.ஜமாபந்தி பற்றி முழுமையான விவரங்கள்
8.இயற்கை இடர்பாடுகளின் போது கிராமநிர்வாக அலுவலரின் பொறுப்புகள் மற்றும் பணிகள்.
9.கிராமம் மற்றும் நகரத்தில் நில ஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை சம்பந்தமான அடிப்படை விவரங்கள்.
10.கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு நில ஒப்படைப்பு சம்பந்தமான அடிப்படை விவரங்கள்.
11.நில வாடகை வசூலிப்பு சம்பந்தமான விவரங்கள்
12.நில வருவாயிலிருந்து கழிவு இனம்.
13.அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரம்பு சம்பந்தமாக நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன் படி A மெமோரண்டம், B மெமோரண்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
14.R.S.O.27-ன் படி நிலங்களில் ஏற்படும் நில உரிமை மாற்றம் கூட்டுப்பட்டா வழங்குதல்.
15.நில உடைமையாளர்களின் உரிமைகளும் வேண்டுதலும்.
16.வயது திருமண நிலை வருமானம் இருப்பிடம் ஆகிய சான்றுகள் வழங்க மேற்கொள்ள வேண்டிய விசாரணை குறித்த செயல்முறைகள்.
17.பட்டா சிட்டா முதலான பதிவேடுகளைப் பதிவு செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்த செயல்முறைகள்.
18.அளவை எண் அளவை உட்பிரிவு எண் அளவை புலம் மற்றும் பல அளவுப் புத்தகம் ஆகியவை குறித்த அடிப்படை விரவங்கள்.
19.இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்.
20.கிராம நிர்வாக அலுவலரால் வசூல் செய்யப்படும் பல தரப்பட்ட அரசு வருவாய்.
21.கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமான கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்.
22.வருவாய் வசூல் சட்டத்தின் அடிப்படை விவரங்கள்.
23.வனத்துறை நிலம் சம்பந்தமான அடிப்படை விவரங்கள்.
24.சந்தனமரம் மற்றும் விலை மதிப்புடைய மரங்களை விற்பனை செய்வது சம்பந்தமான விவரம்.
25.ஆதிவாசி / பழங்குடியினருக்கு அரசு வழங்கும் பாதுகாப்பு மற்றும் உதவிகள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் கடமை.
மேற்கண்ட வழிகாட்டுதலை பயன்படுத்தி கிராம நிர்வாக தேர்வில் நீங்கள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் வெற்றி பெறும் வரை உங்களுக்காக எங்கள் பணி தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக