TNPSC Tamil -இலக்கியம் - பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள பிற செய்திகள்
1. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை இயற்றியவர் யார் - நக்கீரர்
2. திருமுருகாற்றுப்படை என்னும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 317 அடிகள்
3. ஆற்றுப்படுத்தல் என்ற சொல்லின் பொருள் .................. ஆகும் - வழிப்படுத்தல்
4. திருமுருகாற்றுப்படை எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - ஆறு
5. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை 1834-ல் முதன் முதலில் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தவர் யார் - சரவணப்பெருமாலையர்
6. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை 1889-ம் ஆண்டு பதிப்பித்தவர் யார் - உ. வே. சாமிநாதையர்
7. பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாக இடம் பெறுவது எது - திருமுருகாற்றுப்படை
8. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லில் உள்ள பாவகை எது? - ஆசிரியப்பா
9. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லில் பாட்டுடைத் தலைவன் யார் - முருகப் பெருமான்
10. திருமுருகாற்றுப்படை என்னும் நு}லை .................. என்றும் கூறுவர் - புலவர் ஆற்றுப்படை
11. பொருநராற்றுப்படை என்னும் நு}லின் ஆசிரியர் யார் - முடத்தாமக் கண்ணியார்
12. பொருநராற்றுப்படை என்னும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 248 அடிகள்
13. பொருநராற்றுப்படை என்னும் நு}லில் பாட்டுடைத் தலைவன் யார் - கரிகால் வளவன்
14. பொருநராற்றுப்படை என்னும் நு}லில் உள்ள பாவகை எது - ஆசிரியப்பா
15. சிறுபாணாற்றுப்படை எனும் நு}லை இயற்றியவர் யார் - நத்தத்தனார்
16. சிறுபாணாற்றுப்படை எனும் நு}லில் பாட்டுடைத் தலைவன் யார் - நல்லியக்கோடன்
17. பெரும்பாணாற்றுப்படை எனும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 500 அடிகள்
18. பெரும்பாணாற்றுப்படை எனும் நு}லை இயற்றியவர் யார் - உருத்திரங்கண்ணனார்
19. சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதி எது - முல்லைப் பாட்டு
20. முல்லைப் பாட்டு எனும் நு}ல் எத்தனைப் பாடல்களைக் கொண்டுள்ளது - 103 பாடல்கள்
21. முல்லைப் பாட்டு எனும் நு}லில் உள்ள பாவகை எது - ஆசிரியப்பா
22. அகப்பொருள் பற்றிய முல்லைத் திணைக்குரிய நு}ல் எது - முல்லைப்பாட்டு
23. மதுரைக்காஞ்சி என்னும் நு}லை இயற்றியவர் யார் - மாங்குடி மருதனார்
24. மதுரைக்காஞ்சி என்னும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 782 அடிகள்
25. ஐவகை நிலங்களைப் பற்றியும், பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் பற்றி கூறும் நு}ல் எது - மதுரைக்காஞ்சி
26. குறிஞ்சிப்பாட்டு எனும் நு}ல் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது - 261 அடிகள்
27. அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் நு}ல் எது - குறிஞ்சிப்பாட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக