TNPSC DATAILED GROUP 2(A) CUT OFF ANALYSIS WITH JUSTIFICATION:
1) பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் இரண்டும் சரி சமமான தரம் கொண்டவை. மொத்தம் தேர்ந்தெடுக்கப்படும் 1966 தேர்வர்களில், அவர்கள் அனைவரும் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கில தாளில் 98 முதல் 100 கேள்விகள் வரை சரியாக விடையளித்திருப்பார்கள்.
2) பொது தமிழ் வினாக்கள் அனைத்தும் பள்ளிப்பாட புத்தகங்களை விட்டு வெளியில் இருந்து கேட்கப்படவில்லை. மேலும் பொது ஆங்கிலத்தை பொறுத்த வரை வழக்கத்திற்கு மாறாக இலக்கிய பகுதிகளை விட இலக்கணம் தொடர்பான வினாக்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. எனவே IAS தேர்வுக்கு படிக்கும் ஆங்கில இலக்கண புலமை இருக்கும் தேர்வர்கள் பொது ஆங்கில பாடப்பிரிவை பொறுத்த அளவு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகபட்ச மதிப்பெண்ணை பெறும் தேர்வர்களாக உள்ளனர் (Provide they did well in G.S.Paper)
எனவே பொது தமிழ் பொது ஆங்கிலத்தை பொறுத்த அளவு மதிப்பெண் 98 to 100
3) கிராம புறங்களில் இருக்கும் தேர்வர்கள் என்னதான் பொது தமிழில் 98 முதல் 100 வினாக்களுக்கு சரியாக விடையளித்திருந்தாலும், பொது அறிவு கேள்விகளை பொறுத்த அளவு 50 வினாக்களுக்கு மேல் அவர்களால் சரியான விடையளிக்க இயலவில்லை என்பதே நிதர்சன உண்மை.
அதற்கு மூன்று காரணங்கள்
A) கணித பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் எப்போதும் இல்லாத அளவு தற்போது முற்றிலும் வேறுபட்டு வடிவில் மேலும் இதற்கு முன்னர் கேட்கப்பட்ட வினாக்களின் சாயல் எதுவுமே இல்லாமல் தற்போது கேட்கப்பட்டுள்ளதால்(FORMULAE & ANALYSIS BASED) கணிதத்தில் சரியான புரிதல் இல்லாமல் அணைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்தல் என்பது கடினம்.
எனவே கணித பிரிவில் CUT OFF மதிப்பெண்: 20 to 22
B) நடப்பு நிகழுகளில் கேட்கப்பட்ட மொத்தம் 11 வினாக்களில் 5 வினாக்களுக்கு விடையளிப்பது என்பதே மிகவும் கடினம். எப்போதும் கேட்கப்படும் முக்கிய பிரமுகர்கள், விருதுகள் உள்ளிட்ட எந்த வினாக்களும் தற்போது இடம்பெறவில்லை
எனவே நடப்பு நிகழ்வுகளை பொறுத்த அளவு CUT OFF மதிப்பெண்: 5
C) மீதம் இருக்கக்கூடிய வரலாறு, அரசியல் அமைப்பு, அறிவியல், புவியியல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியலில் இருந்து கேட்கப்பட்ட, தேர்வர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 கடினமான வினாக்கள்.
1) ஆக்சிஜனேற்ற வினா
2) வைக்கம் சத்யாகிரகா LEADERS
3) தம்மபாணி
4) பாராளுமன்றத்தின் தலை சிறந்த நபர்
5) காந்திய திட்டம் அகர்வால்
6) புது வாழ்வு திட்டம்
7) மானாவாரி சாகுபடி பரப்பு
8) சூப்பர் நோவா
9) குளுகோஸின் சுவாச ஈவு
10) நீலகண்ட பிரம்மசாரி பிறந்த இடம்
11) சோழநாட்டின் வருவாய் துறை
12) சுதேசி நாள்
13) காந்திய முறை மற்றும் வளர்ச்சி
14) ஹைட்ரஜனின் புதிய அமைப்பு
15) ராஜிவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை
16) HIV/AIDS
17) SKILL INDIA MISSION
18) Article 275 & 282
மேற்படி கடினமான 18 கேள்விகளும் எந்த நிலையிலும் CUT OFF மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இடத்தில் இல்லை.
4) மேலும் IAS தேர்வுக்கு படிக்கும் ஆங்கில இலக்கண புலமை மிகுந்த தேர்வர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும் உயர்ந்த இடத்தில் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஆங்கிலத்தில் மற்றும் பகுத்தாராயும் அறிவு தேவைப்படும் பொது அறிவு வினாக்களுக்கும் மற்ற பிரிவினரை விட நன்றாக விடையளித்திருப்பர். அதிகபட்சம் 165 வினாக்களுக்கு மேல் ஒரு சில தேர்வர்கள் இந்த முறை சரியான விடையளிக்க வாய்ப்புண்டு. ஆனால் CUT OFF மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் அளவுக்கு 165 வினாக்களுக்கும் மேல் சரியாக விடையளிக்கும் தேர்வர்கள் அதிக அளவில் இருக்க மாட்டார்கள்.
5) கிராமப்புற மாணவர்களை பொறுத்த அளவு பொது தமிழில் 100 வினாக்களுக்கும் விடையளித்திருந்தாலும், பொது அறிவு வினாக்களில் எதிர்பாராத பகுதிகளில் இருந்து கடினமான வினாக்கள் DEGREE நிலையிலான
புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டதால் 50 வினாக்களுக்கு மேல் அவர்களால் விடையளிக்க இயலாது.
6) மேலும் நடந்து முடிந்த, பள்ளிப்பாட புத்தகங்களில் இருந்து மட்டுமே 200 வினாக்களும் கேட்கப்பட்ட GROUP 4 தேர்வில் 188 வினாக்களுக்கு மேல் விடையளித்த பலர் இந்த தேர்வில் 155 வினாக்களுக்கு மட்டுமே விடையளித்துள்ளனர் . காரணம் தற்போது அணைத்து பொது அறிவு வினாக்களும் பள்ளி பாட புத்தகங்களில் இல்லாமல் DEGREE அளவிலான புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளன.
மேற்படி ஆய்வில் இருந்து பெறப்பட்ட CUT OFF ANALYSIS:
A) பொது தமிழ் பொது ஆங்கிலம் : 98 to 100
B) கணிதம் : 20 to 22
C) நடப்புநிகழ்வுகள் (11 வினாக்கள்) : 5
D) இதர பொது அறிவு (CUT OFF மதிப்பெண்ணை
நிர்ணயிக்காத 18 கடினமான வினாக்கள் தவிர இதர
46 வினாக்களுக்கு உண்டான CUT OFF மதிப்பெண்)
சராசரியாக : 30 to 32
SO CUT OFF FOR BC(MALE) - 98 + 20 + 5 + 30 = 153 and above
MBC (MALE) 151
SC (MALE) 149
BC (FEMALE) 151
MBC (FEMALE) 149
SC (FEMALE) 147
(NOTE: கடந்த வருடம் CUT OFF FOR BC (MALE) - 155
இந்த வருடம் பொது அறிவு கேள்விகள் கடினமாக இருப்பதால் கடந்த வருடத்தை விட இரண்டு வினாக்கள் குறைவான CUT OFF இந்த வருடம் எதிர்பார்க்கலாம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக