வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

உலகின் அழகான நகரம்



உலகின் அழகான  நகரம்

உலகில் உள்ள நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரம் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் பெற்றுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த எகானமிஸ்ட் இன்டலிசன்ஸ் யூனிட் என்ற அமைப்பு, உலகின் பல்வேறு வாழ்வதற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட நகரங்களை, ஆண்டுதோறும் ஆய்வு செய்து தரவரிசை வெளியிடுகிறது.

140 நகரங்கள்
ஆய்வில் இடம்பெற்றன.

இப்பட்டியலில் ஒன்று, இரண்டல்ல தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது
*ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்.*

இந்நகரம்
100க்கு 97.5 மதிப்பெண்கள் எடுத்துள்ளது.

இப்பட்டியலில்
2 மற்றும் 3வது இடத்தில் ஆஸதிரியாவின் வியன்னா, கனடாவின் வான்கோவர் உள்ளது.

*அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன் ஆகிய நகரங்கள் 'டாப் - 10' பட்டியலில் இடம்பெறவில்லை.*

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் நகரங்கள், அங்கு நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களால் இப்பட்டியலில் முந்தைய ஆண்டை விட தற்போது சரிவைச் சந்தித்துள்ளன.

இது தவிர உள்நாட்டு போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிரிய தலைநகர் டாமாக்கஸ், கடைசி இடத்தில் உள்ளது.

*தேர்வு விதம்*

ஒரு நகரில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி, உறுதித்தன்மை மற்றும் கலாசாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
*சிறந்த*
*10 நகரங்கள்*
*நகரம் மதிப்பெண்*


1. *மெல்போர்ன்*
(ஆஸ்திரேலியா) 97.5

2. *வியன்னா*
(ஆஸ்திரியா )97.4

3. *வான்கோவர்* (கனடா) 97.3

4. *டொரண்டோ*
(கனடா) 97.2

5. அடிலெய்டு
*(ஆஸ்திரேலியா) 96.6*

6. *கால்கரி* (கனடா) 96.6

7. *பெர்த்* (ஆஸ்திரேலியா) 95.9

8. *ஆக்லாந்து*
( நியுசிலாந்து) 95.7

9. *ஹெல்சின்கி*
(பின்லாந்து) 95.6

10. *ஹம்பர்க்*
( ஜெர்மனி) 95.0

*கடைசி 10 இடங்கள்*


1. டாமாக்கஸ் (சிரியா) 30.2

2. லாகோஸ் (நைஜீரியா) 46.4

3. டிரிபோலி (லிபியா) 36.6

4. தாகா (வங்கதேசம்) 38.7

5. போர்ட் மோர்ஸ்பை (பப்புவா நியூ கினியா) 39.6

6. கராச்சி( பாகிஸ்தான்) 40.9

7. அல்ஜீரிஸ் (அல்ஜீரியா)40.9

8. ஹராரே ( ஜிம்பாப்வே)42.6

9.தவுலா (கேமரூன்)44

10. கிலீவ் (உக்ரைன்)47.8

*பெரிய மைதானம்*

உலகில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் , இருக்கைகளின் எண்ணிக்கை எடிப்படையில் பெரிய மைதானம் என்ற பெருமையை மெல்போர்ன் பெற்றுள்ளது.

இங்கு ஒரே நேரத்தில்
1 லட்சம் பேர் போட்டியை
கண்டு ரசிக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக