புதன், 21 டிசம்பர், 2016

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது


நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது.

நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக நெல்லை மாவட்ட எழுத்தாளருக்கு இந்த விருது கிடைக்கிறது.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. 70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார்.
இயற்பெயர் கல்யாணசுந்தரம். "கல்யாண்ஜி' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார்.
இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
1962களில் இருந்து எழுதிவருகிறார்.
இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
கலைமாமணி, தமிழ்பேராயம்,
இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது தந்தை தி.க.சிவசங்கரனும் சிறந்த எழுத்தாளர்.
இவர் 2000ம் ஆண்டில் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்னும் விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
2012ல் டி.செல்வராஜ் (தோல்),
2013ல் ஜோ டீ குரூஸ் (கொற்கை),
2014ல் பூமணி(அஞ்ஞாடி),
2015ல் மாதவன் (இலக்கிய சுவடிகள்)
ஆகியோரை தொடர்ந்து இந்த ஆண்டு வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி 1954ல் துவக்கப்பட்டது.
1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக