வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தமிழக அரசு இலக்கிய விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு இலக்கிய  விருதுகள் அறிவிப்பு 


tn_govt_logo

தமிழக அரசின் சார்பில் மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ் சமுதாயத்துக்கு தொண்டாட்றியவர்களுக்கான விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாட்றிப் பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
கீழ்காணும் விருதுகளை ஜனவரி 16-ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிழழ் ஆகிய வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும்.

விருதுகள் பெறுவோர் பட்டியல் பின்வருமாறு:
  • திருவள்ளுவர் விருது 2018 - முனைவர் கோ.பெரியண்ணன்
  • தந்தை பெரியார் விருது 2017 - திருமதி பா.வளர்மதி
  • அண்ணல் அம்பேத்கர் விருது 2017 - டாக்டர் சகோ.ஜார்ஜ், கே.ஜே
  • பேரறிஞர் அண்ணா விருது 2017 - திரு அ. சுப்ரமணியன்
  • பெருந்தலைவர் காமராசர் விருது 2017 - திரு. தா.ரா.தினகரன்
  • மகாகவி பாரதியார் விருது 2017 - முனைவர் க.பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது 2017 - திரு கே.ஜீவபாரதி
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது 2017 - எழுத்தாளர் திரு வை.பாலகுமாரன்
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது 2017 - முனைவர் ப.மருதநாயகம்

இவ்விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 50 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 பெறுவதற்கான அரசாணை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக