ஞாயிறு, 27 மே, 2018

1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-


1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் நடைமுறையில் இருந்த போது பதவி வகித்த வங்காள தலைமை ஆளுநர்கள் :-

1. வாரன் ஹேஸ்டிங்ஸ் = 1774 - 1785
2. காரன் வாலிஸ் பிரபு =  1786 - 1793
3. சர் ஜான் ஷோர் = 1793 - 1798
4. வெல்லெஸ்ஸி பிரபு = 1798 - 1805
5. ஜார்ஜ் பார்லோ = 1805 - 1807
6. மிண்டோ பிரபு = 1807 - 1813
7. ஹேஸ்டிங்ஸ் பிரபு = 1813 - 1823
8. ஆம்ஹெர்ஸ்ட் பிரபு = 1823 - 1828
9. வில்லியம் பெண்டிங் பிரபு = 1828 - 1833

🌺1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது பதவி வகித்த இந்திய தலைமை ஆளுநர்கள்:-
1. வில்லியம் பெண்டிங் பிரபு = 1833 - 1835
2. சர் சார்லஸ் மெட்காஃப் = 1835 - 1836
3. ஆக்லண்ட் பிரபு = 1836 - 1842
4. ஹார்டிஞ்ச் பிரபு எல்லன்பரோ பிரபு = 1842 - 1844
5. ஹார்டிஞ்ச் பிரபு 1 = 1844 - 1948
6. டல்ஹெசி பிரபு = 1848 - 1856
7. கானிங் பிரபு = 1856 - 1858

🌺 இந்திய பெருங்கலகம் பின் இந்திய தலைமை ஆளுநர் என்ற பதவி வைசிராய் என மாற்றப்பட்டது வைசிராய் என்பதன் பொருள் (அரசு பிரதிநிதி)
1. கானிங் பிரபு = 1858 - 1862
2. எல்ஜின் பிரபு = 1862 - 1863
3. லாரன்ஸ் பிரபு = 1863 - 1869
4. மேயோ பிரபு = 1869 - 1872
5. நார்த் பரூக் பிரபு = 1872 - 1876
6. லிட்டன் பிரபு = 1876 - 1880
7. ரிப்பன் பிரபு = 1880 - 1884
8. டப்ரின் பிரபு = 1884 - 1888
9. லேண்ட்ஸ் டௌன் பிரபு = 1888 - 1894
10. எல்ஜின் பிரபு = 1894 - 1899
11. கர்சன் பிரபு = 1899 - 1905
12. மிண்டோ பிரபு = 1905 - 1910
13. ஹார்டிஞ்ச் பிரபு = 1910 - 1916
14. செம்ஸ் போர்டு பிரபு = 1916 - 1921
15. ரீடிங் பிரபு = 1921 - 1926
16. இர்வின் பிரபு = 1926 - 1931
17. வெல்லிங்டன் பிரபு = 1931 - 1936
18. லின்லித்கொ பிரபு = 1936 - 1944
19. வேவல் பிரபு = 1944 - 1947
20. மவுண்ட் பேட்டன் பிரபு = 24 மார்ச் 1947 - 15 ஆகஸ்ட் 1947
[28/05, 7:40 AM] MBM: ராபர்ட் கிளைவ் பற்றிய சில தகவல்கள்:-
🌷 வங்காளத்தில் முதல் கவர்னர்
🌷 வங்காளத்தில் இரண்டு முறை கவர்னராக இருந்தவர் (1757-1760) மற்றும் (1765-1767)
🌷 'இந்தியாவை வென்றவர்' என்று அழைக்கப்பட்டார்
🌷 ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்பட்டார்
🌷 வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை (Dwal Government of Bengal System) கொண்டுவந்தவர்
🌷 இரட்டை ஆட்சி எனபது வரி வசூல் உட்பட உண்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் இடமும் அதே நேரத்தில் பொறுப்புகள் அனைத்தும் வங்காள நவாபிடமும் இருந்த்து
🌷 கம்பனியில் எழுத்தராக இந்தியாவுக்கு வந்து ராணுவ பணியில் இணைந்து பின் கவர்னராக உயர்ந்தவர்
🌷 இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்.
🌷 1774 இங்கிலாந்து திரும்பிய பின் தற்கொலை செய்து கொண்டார்.
[28/05, 7:40 AM] MBM: வங்காளத்தின் முதன் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) பற்றிய சில தகவல்கள்:-
🌷 வங்காளத்தின் முதன்முறையாக தலைமை ஆளுநர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வந்தவர் - 1773
🌷 கலெக்டர் பதவி உருவாக்கியவர்
🌷 முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு கருவூலம் மாற்றப்பட்டது
🌷 1772ல் கல்கத்தா வங்காளத்தின் தலைநகரமாகியது
🌷 உரிமையில் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் திவானி அதலத் எனப்பட்டது
🌷 குற்றவியல் மேல் முறையீடு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது
🌷 இந்திய மற்றும் அயல் நாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும் 2.5 % ஒரே சீரான சுங்க வரி வசூலிக்கப்பட்டது
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் 'இந்திய சட்டங்களின் தொகுப்பு' 'ஹால்ஹெட்' என்பவரால் உருவாக்கப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது
🌷 கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீ‌திப‌தி மூன்று துணை நீதிபதிகள் இருந்தனர்.
🌷 முதல் தலைமை நீ‌திப‌தி சர் எலிஜா இம்போ
🌷  வில்லியம் ஜோன்சுடன் இணைந்து 1784ல் வங்காள ஆசிய கழகத்தை (Asiatic Society of Bengal) தொற்றிவித்தார்
🌷 சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதல் முறையாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்
🌷 1787 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு (impeachment) போடப்பட்டது.
🌷 தேச துரோக குற்றச்சாட்களில் முக்கியமானவை:-
1. நந்தகுமார் வழக்கு
2. ரோகில்லா போர்
3. செயித்சிங் பதவியிறக்கம்
4. அயோத்தி பேகம்கள் விவகாரம்
🌷  வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது போடப்பட்ட தேச துரோக குற்றங்கள் - 22
🌷 வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தியவர் - எட்மண்ட் பர்க்
🌷 7 ஆண்களுக்கு விசாரணைக்கு பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்
[28/05, 7:40 AM] MBM: காரன் வாலிஸ் பிரபு (1786 - 1793) பற்றிய சில தகவல்கள்:-
🌸 நிலையான நிலவரி திட்டம் (1793) கொண்டுவந்தவர்
🌸 நிலையான நிலவரி திட்டம் வேறு பெயர் ஜமீன்தாரி முறை
🌸 தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை தொடங்கினார்.
🌸 ஜார்ஜ் பார்லோ என்பவர் உதவியுடன் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பு உருவாக்கினார்
🌸 ஜார்ஜ் பார்லோ சட்டத் தொகுப்பு 'மாண்டெஸ் கியூ' வின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
🌸 மூன்றாம் மைசூர் போர் முடிவில் திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை (1792) செய்து கொண்டார்.
🌸 மாவட்ட நீதிபதி பதவியை உருவாக்கினார்.
🌸 தற்கால இந்திய ஆட்சி பணியின் தந்தை என போற்றப்பட்டார்.
🌸 காவல்துறை சீர்திருத்தம் ஒவ்வொரு மாவட்டமும் 'தாணா' என்ற காவல் சரகமாக பிரிக்கப்பட்டது.
🌸 ஒவ்வொரு 'தாணா' வும் தரோகா எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: வெல்லெஸ்லி பிரபு (1798-1805) பற்றிய சில தகவல்கள்:-
🌸 இவரது முழு பெயர் ரிச்சர்ட் கோலி  வெல்லெஸ்லி
🌸 'வங்கப்புலி' என்று தன்னை அழைத்துக் கொண்டார்
🌸 இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்ற நிலையை பிரிட்டிஷ் இந்திய பேரரசு என மாற்றினார்
🌸 துணை படைத்திட்டத்தை (1798) முதன் முதலில் ஹைதராபாத்தில் அறிமுகபடுத்தினார்
🌸 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய போர்கள் நான்காம் மைசூர் போர்(1799),  இரண்டாம் மராட்டிய போர் (1803-1805)
🌸 இவரின் துணைப்படை திட்டத்தின் மகுடம் என கருதப்படுவது, பசீல் உடன்படிக்கை (1802)
🌸 பசீல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர் பேன்வா இரண்டாம் பாஜிராவ்
🌸 இவர் போன்ஸ்லேவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் தியோகன் உடன்படிக்கை
🌸 வெல்லெஸ்லி இந்தியாவுடன் செய்து கொண்ட துணைப்படை ஒப்பந்தம் சுர்ஜி. அர்ஜுன்கான் உடன்படிக்கை
🌸 'ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர்' என அழைக்கப்பட்டார்.
🌸 ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்த கையாண்ட முறைகள் மூன்று அவை
1. துணைப்படை திட்டம்
2. போரின் மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல்
3. நாடுகளை இணைத்தல்.
[28/05, 7:40 AM] MBM: ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813 - 1823) பற்றிய சில தகவல்கள்:-
🌻 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
1. நேபாளப் போர் (கூர்க்காவினருக்கு எதிரான போர் - (1814-1816)
2. மூன்றாம் மராட்டிய போர் (1817- 1818)
3. பிண்டாரிகளை ஒடுக்குதல்
🌻 நேபாள போர் மார்ச் 1816 சகௌலி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🌻 கூர்க்கா போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் க்கு 'மார்குயிஸ்' பட்டம் வழங்கப்பட்டது.
🌻 மூன்றாம் மராட்டிய போர் 1818 மாண்டசேர் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🌻 பிண்டாரிகள் ஊதியமின்றி ராணுவத்தில் பணியாற்றுவர். அதற்கு ஈடாக கொள்ளை அடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
🌻 பிண்டாரிகளுன் முக்கியமாக தலைவர்கள் - வாசல் முகம்மது, சிட்டு, கரீம்கான்
🌻 1818 பிண்டாரிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.
🌻 1816 சீராம்பூரில் மார்ஸ்மேன் என்பவரால் 'சமாச்சார் தர்பன்' இதழ் தொடங்கப்பட்டது.
🌻 சமாச்சார் தர்பன் என்பது வார இதழ்.
🌻 சமாச்சார் தர்பன் வங்காள மொழியில் தொடங்கப்பட்டது.
🌻 1817 கல்கத்தாவில் இந்து கல்லூரி தொடங்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: வில்லியம் பெண்டிங் பிரபு (1828 - 1835) பற்றிய சில தகவல்கள்:-
🌺 1803 ஆம் ஆண்டு சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌺 1806 ஆம் ஆண்டு வேலூர் கலகம் காரணமாக திருப்பி அழைக்கப்பட்டார்.
🌺 1828 தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் :-
1. சதி ஒழிப்பு -1829
2. தக்கர் ஒழிப்பு - 1830
3. பெண் சிசுக் கொலை தடுத்தல்
4. 1833 - ஆம் ஆண்டு பட்டைய சட்டம்
5. 1833 - ஆம் ஆண்டு மகல்வாரி முறை அறிமுகம்
6. 1835 - ஆம் ஆண்டு ஆங்கில மொழி கல்வி அறிமுகம்

🌺 டிசம்பர் 4, 1829 விதிமுறை 17 சட்டத்தின் படி சதி ஒழிக்கப்பட்டது.
🌺 சதி ஒழிப்பிற்கு உறுதுணையாக இருந்தவர், ராஜாராம் மோகன் ராய்.
🌺 சதி ஒழிப்பு 1830 சென்னை, பம்பாய் மாகாணங்களில் விரிவுபடுத்தப்பட்டது.
🌺 தக்கர்களை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர் - சர் வில்லியம் சீலிமேன்.
🌺 முதல் சட்ட உறுப்பினர் - டி.பி. மெக்காலே
🌺 இந்திய தண்டனை சட்டம் மெக்காலேவால் எழுதப்பட்டது.
🌺 மெக்காலே கல்வி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 22 பிப்ரவரி 1833
🌺 ஆங்கிலம் இந்தியாவின் பயிற்சி மொழியாக்கப்பட்ட ஆண்டு - 7 மார்ச் 1835
🌺 இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி 28 ஜனவரி 1835  கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது.
🌺 இந்தியாவில் இரண்டாவது மருத்துவ கல்லூரி சென்னை,  2 பிப்ரவரி 1835
🌺 மகல்வாரி முறை அறிமுகம் - 1833
🌺 மகள் என்றால் கிராமம். கிராமமே அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் முறை மகல்(வாரி) முறை
🌺 இராணுவத் துறையில், இரட்டை படி பேட்டா முறையை ரத்து செய்தார்
[28/05, 7:40 AM] MBM: டல்ஹவுசி பிரபு (1848 - 1856) பற்றிய சில தகவல்கள்:-
💐 இவர் காலத்தில் முக்கிய நிகழ்வுகள்:
1. அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse)
2. இரண்டாம் சீக்கிய போர் -1849
3. இரண்டாம் பர்மியப் போர் - 1852
4. இரயில் பாதை அறிமுகம் - 1853
5. தபால், தந்தி அறிமுகம்
6. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை - 1854
7. பொதுப்பணி துறை

💐 அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷ் வசமாயின
💐 அவகாசியிலிக் கொள்கை படி பிடிக்கப்பட்ட நாடுகள் - சகாரா (1848), ஜான்சி, நாக்பூர் (1854)
💐 அவகாசியிலிக் கொள்கை படி இறுதியில் பிடிக்கப்பட்ட நாடு - அயோத்தி
💐 1849 இரண்டாம் சீக்கியப்போர் முடிவில் பஞ்சாப் இணைக்கப்பட்டது.
💐 1859 ஆம் ஆண்டு சர்ஜான் லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராக பதவியேற்றார்.
💐 1852 இரண்டாம் பர்மியப் போர் முடிவில், பர்மா இணைக்கப்பட்டது.
💐 பர்மா ஆணையராக நியமனம் செய்தவர் மேஜர் ஆர்தர் பைரே
💐 இந்தியாவின் முதல் இரும்பு பாதை 1953 பம்பாய் இருந்து தானே வரை (34 கி.மீ.) போடப்பட்டது.
💐 இந்தியாவின் இரண்டாவது இரும்பு பாதை 1854 ஹௌரா வில் இருந்து ராணிக்கஞ்ச் வரை போடப்பட்டது.
💐 1856 - சென்னை இருந்து அரக்கோணம் வரை போடப்பட்டது.
💐 1853 - கல்கத்தா முதல் ஆக்ரா வரை தந்தி வசதி அமைக்கப்பட்டது.
💐 1852 - ஆம் ஆண்டு ' ஓ ஷாகன்னசே' என்பவர் தந்தி துறையின் முக்கிய கண்காணிபரபாளராக நியமனம்  செய்யப்பட்டது.
💐 1854 அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
💐 இந்தியாவின் முதல் அஞ்சல் தலை 1852 கராச்சியில் வெளியிடப்பட்டது.
💐 1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட்  கல்வி அறிக்கை ' Woods Dispatch' வெளியிடப்பட்டது.
💐 சிம்லா கோடைக்கால தலைநகரமாக்கப்பட்டது.
💐 ரூர்க்கியில் 1847 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
💐 1856 விதவை மறுமணம் சட்டம் ( Widow Remarriage Act - 1856) இயற்றப்பட்டது.
💐 விதவை மறுமணம் சட்டம் இயற்ற உறுதுணையாக இருந்தவர் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
💐  பொதுப்பணித்துறை ஆரம்பிக்கப்பட்டது
💐 கராச்சி, பம்பாய், கல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டது
💐 1853 ICS தேர்வு துவக்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: கானிங் பிரபு (1856 - 1862) பற்றிய சில தகவல்கள்:-
🌹 ஆங்கில இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
🌹 இந்தியாவின் முதல் வைசிராய்.
🌹 வைசிராய் என்பதன் பொருள் அரசப் பிரதிநிதி
🌹 1857 சிப்பாய் கலகம் இவர் காலத்தில் நடைபெற்றது.
🌹 1858 நவம்பர் 1, ல் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
🌹 அவகாசியிலிக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.
🌹1857, சென்னை, மும்பை, கொல்கத்தா வில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
🌹 1861 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்ற பட்டது.
🌹 விக்டோரியா பேரரிக்கை அலகாபாத் தர்பாரில் இவரால் வாசிக்கப்பட்டது.
🌹 அலகாபாத் தர்பார் நடைபெற்ற ஆண்டு - 1 நவம்பர் 1858.
[28/05, 7:40 AM] MBM: ரிப்பன் பிரபு (1880 - 1884) பற்றிய சில தகவல்கள்:-
🌹இவர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்:-
1. தலசுயாட்சி - 1882
2. ஹன்டர் கல்விகுழு - 1882
3. முதல் தொழிற்சாலை சட்டம் - 1881
4. முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு - 1881
5. இல்பர்ட் மசோதா - 1883
🌹தலசுயாட்சி (பஞ்சாயத்து முறை) சட்டம் 1882 நிறைவேற்றப்பட்டது.
🌹 1882 ஹன்டர் கல்வி குழு தொடங்கப்பட்டது.
🌹 இது தொடக்க கல்வி மேம்படுத்த அறிவுறுத்தியது.
🌹 1881 தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது.
🌹 இது 7 வயது குழந்தைகளை தொழிற்சாலைகளில் நியமிக்க தடை விதிக்கப்பட்டது.
🌹 1881 முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
🌹 ரிப்பன் பிரபு அறிவித்த வட்டார மொழி பத்திரிகை சட்டம் நீக்கப்பட்டது.
🌹 ஐரோப்பிய குற்றவாளிகள் இந்திய நீதிபதிகள் விசாரிக்க வகை செய்யப்பட்ட சட்டம் இல்பர்ட் மசோதா 1883, பின்னர் இம்மசோதா திரும்ப பெறப்பட்டது.
🌹 இல்பர்ட் மசோதா சர்ச்சை இந்திய தேசியம் வளர உதவியது.
🌹 இல்பர்ட் மசோதா நிகழ்வில் உடனடி நிகழ்வாக 1885 ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
🌹 இவர் பல பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்டதால் இவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அப்பன்) என்று இந்திய மக்களால் புகழப்பட்டார்.
[28/05, 7:40 AM] MBM: லிட்டன் பிரபு (1876 - 1880) பற்றிய சில தகவல்கள்:-
🌼 இவர் தலைகீழ் எண்ணமுடைய வைசிராய் ( Viceroy of Reverse Character) எனப்படுகிறார்.
🌼 இங்கிலாந்து ராணி விக்டோரியா விற்கு கெய்சர்-இ-ஹிந்த் (Kaiser-i-Hind) பட்டம் வழங்க 1877 ல் டெல்லி தர்பாரை நடத்தியவர்.
🌼 1878 படைக்கல சட்டம் என்ற ஆயுதச் சட்டம் (Arms Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1878 வட்டார மொழி பத்திரிகை சட்டம் (Vernacular Press Act) நிறைவேற்றப்பட்டது.
🌼 1876 - 1878 இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
🌼 1878 - 1880 ல் பஞ்ச நிவாரண குழு சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் அமைக்கப்பட்டது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் (1878 - 1880) இவர் காலத்தில் நடைபெற்றது.
🌼 இரண்டாம் ஆப்கானியப் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - காண்டமக்
🌼 காபூலுக்கு வந்த தூதர் மற்றும் அதிகாரிகளை ஆப்கானியர்கள் படுகொலை செய்தனர். இதற்கு லிட்டன் பிரபு பொறுப்பு என அவரை 1880 பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
🌼 இந்தியாவின் 'நிரோ மன்னர்' என்று அழைக்கப்பட்டார்.
🌼 நிரோ மன்னர் என அழைக்க காரணம் ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் அதே போல் இந்திய பஞ்சத்தில் இருந்த போது டில்லி தர்பார் நடத்தினார்.
[28/05, 7:40 AM] MBM: லேன்ஸ்டௌன் பிரபு (1888 - 1894) பற்றிய சில தகவல்கள்:-

🌷 1891 இரண்டாவது தொழிற்சாலை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.
🌷 பெண்கள், குழந்தைகள் வேலை நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🌷 பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லைக்கோடு நிர்ணயிக்க துரந்த் குழு (Durand Commission) நியமிக்கப்பட்டது.
🌷 1892 இந்திய கவுன்சில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
🌷 சிவில் பணியானது கீழ் கண்ட வாறு பிரிக்கப்பட்டது:-
1. மத்திய அரசு பணி (Imperial)
2. மாகாண பணி (Provincial)
3. சார்நிலைப்பணி (Subordinate)
[28/05, 7:40 AM] MBM: கர்சன் பிரபு (1899 - 1905) பற்றிய சில தகவல்கள் :-
🌺 இவர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்:
1. இந்திய பல்கலைக்கழக சட்டம் - 1904
2. காவல் துறை சீர்திருத்தம்
3. கல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
4. தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் - 1904
5. வங்க பிரிவினை - 1905
🌺 1902 தாமஸ் ராலே கல்விகுழு பரிந்துரை படி 1904 ல் இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
🌺 சர் ஆண்ரூ பிரேசர் தலைமையில் போலீஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🌺 இராணுவத்தை சீரமைக்க 'கிச்னர் பிரபு' பொறுப்பில் விடப்பட்டது.
🌺 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்டது. அதிகாரிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
🌺 1904 புராதான சின்னம் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
🌺 தொல்பொருள் இலாகா ( Archeological Survey of Indian) அமைக்கப்பட்டது.
🌺 1902 ல் தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரலாக சர்.ஜான் மார்ஷல் நியமிக்கப்பட்டார்.
🌺 1899 காதித நாணயச் சட்டம் (Indian Coinage and Paper Currency Act) இயற்றப்பட்டது.
🌺 வங்கப் பிரிவினை  16 அக்டோபர் 1905.
1. வங்காளம் தலைநகர் - கல்கத்தா
2. கிழக்கு வங்காளம், அஸ்ஸாம் தலைநகர் - டாக்கா
🌺 வங்கப் பிரிவினை திட்டத்தை உருவாக்கியவர் - வில்லியம் வார்
🌺 கூட்டுறவு சங்கங்கள் அறிமுகம் படுத்தப்பட்டன.
🌺 இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க பேரரசு இளைஞர் படை (Imperial Cadet Corps) நிறுவப்பட்டபோது.
🌺 1901 சர் கோலின் ஸ்கார்ட் மானெரிஃப் தலைமையில் பாசன கமிஷன் அமைக்கப்பட்டது.
🌺 சர் தாமஸ் ராபர்ட் சன் தலைமையில் இருப்பு பாதை சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.
🌺 1904 பூசாவில் விவசாய ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Institution) நிறுவப்பட்டது.
🌺 குற்றவியல் புலனாய்வு விசாரணை துறை (CID - Criminal Investigation Department) மற்றும் மத்திய குற்றவியல் தகவல் சேகரிக்கும் மனை (CIB - Central Intelligence Bureau) இவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
🌺 இந்திய திட்ட நேரம் (IST) அறிமுகப்படுத்தப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: மின்டோ பிரபு (1905 - 1910) பற்றிய சில தகவல்கள்:-
🍄 1905 வங்கப் பிரிவின் காரணமாக சுதேசி இயக்கம் ஏற்பட்டது.
🍄 அரசியலில் அமைதி நிலை நிலவியது.
🍄 1906 முஸ்லிம் லீக்  தோற்றம்.
🍄 1907 சூரத் பிரவு ஏற்படுத்தப்பட்டது.
🍄 புரட்சிகளை ஒடுக்க பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது.
🍄 லாலா லஜபதிராய் மற்றும் அஜித் சிங் (மே 1907) பாலகங்காதர திலகர் (ஜூலை  1908) ஆகியோர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
🍄 1909 மின்டோ - மார்லி சீர்திருத்தம்
🍄 இச்சட்டத்தின் முடிவில் முஸ்லீம்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍄 மின்டோ - மார்லி சீர்திருத்தில் மின்டோ இந்திய அரசு பிரதிநிதி
🍄 மார்லி என்பவர் இந்திய அரசுக்கான ஆங்கில பிரதிநிதி.
[28/05, 7:40 AM] MBM: செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-
🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (1910 - 1916) பற்றிய சில தகவல்கள்:-
🌻வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது - 1911
🌻 கல்கத்தா வில் இருந்து டெல்லி இந்தியாவின் தலைநகரானது - 1911
🌻 காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து  9 ஜனவரி 1915 இந்தியா திரும்பினார்.
🌻 அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்க போவதாக அறிவித்தார்.
🌻 23 டிசம்பர் 1912 இவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு அதில் இருந்து தப்பிவிட்டார்.
🌻 இவருக்கு டெல்லியில் நுழையும் போது சாந்தினி சவுக் அருகில் குண்டு வீசப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: ரீடிங் பிரபு (1921 - 1926) பற்றிய சில தகவல்கள் :-
🍁 ரௌலட் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
🍁 ஒத்துழையாமை இயக்கம் ஒடுக்கப்பட்டது.
🍁 வேவல் இளவரசர் நவம்பர் 1921 இந்தியா வந்தார்.
🍁 1922 வேவல் இளவரசர் தமிழகம் வந்தார்.
🍁 1921 மாப்ள கலகம் கேரளாவில் நடைபெற்றது.
🍁 கக்கோரி ரயில் கொள்ளை 9 ஆகஸ்ட் 1925 ல் நடைபெற்றது.
[28/05, 7:40 AM] MBM: இர்வின் பிரபு (1926 - 1931) பற்றிய சில தகவல்கள்:-
🍃 1927 - சைமன் குழு நியமிக்கப்பட்டது
🍃 1928 - சைமன் குழு இந்திய வருகை
🍃 சைமன் குழுவின் தலைவர் சர் ஜார்ஜ் சைமன்
🍃 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரமே குறிக்கோள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
🍃 1930 காந்தியால் சட்ட மறுப்பு இயக்கம் ( உப்பு சத்தியாகிரகம் இயக்கம்) நடைபெற்றது.
🍃 1930 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
🍃 காந்தி இர்வின் ஒப்பந்தம் - 5 மார்ச் 1931
🍃 சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஜடின் தாஸ் உயிர் நீத்தார் - 1929
🍃 தண்டி யாத்திரை காந்தி தலைமையில் 12 மார்ச் 1930-ல் நடைபெற்றது
[28/05, 7:40 AM] MBM: வெல்லிங்டன் பிரபி (1931 - 1936) பற்றிய சில தகவல்கள்:-
🌺 இரண்டாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1931
🌺 மூன்றாம் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது - 1932
🌺 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - பி.ஆர். அம்பேத்கர்
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் 16, ஆகஸ்ட் 1932 அறிவிக்கப்பட்டது.
🌺 வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் அறிவித்தவர் - ராம்சே மக்டொனால்ட்
🌺 இதனை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
🌺 இதனை தொடர்ந்து பூனா ஒப்பந்தம் 1932 ல் நிறைவேற்றப்பட்டது.
🌺 இந்திய அரசு சட்டம் - 1935
🌺 இந்திய அரசு சட்டத்தின் படி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட்டது.
[28/05, 7:40 AM] MBM: வேவல் பிரபு (1944 - 1947) பற்றிய சில தகவல்கள்:-
🍁 ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இடையே சிம்லாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை 25 ஜூன் 1945 தோல்வியடைந்த்து.
🍁 16 மே 1946, அமைச்சரவை தூதுக்குழு இந்தியா வருகை
🍁 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 9 டிசம்பர் 1946 நடந்தது.
[28/05, 7:40 AM] MBM: லின்லித்கொ பிரபு (1936 - 1944) பற்றிய சில தகவல்கள்:-
🌷 1935 வருட இந்திய அரசாங்க சட்டம் மாகாணங்களில் நடைமுறை படுத்தப்பட்டது.
🌷 மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 8 ல் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.
🌷 1939 ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.
🌷 அந்த நாளை முஸ்லிம் லீக் விமோசன தினமாக 22 டிசம்பர் 1939 (Deliverance day) கொண்டாடியது.
🌷 1940 ஆகஸ்ட் நன்கொடை அறிவிப்பு.
🌷 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை.
🌷 வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 ஆகஸ்ட் 1942, தொடங்கப்பட்டது.
🌷 மே, 1940 ல் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக