ஞாயிறு, 27 மே, 2018

CURRENT AFFAIRS May 2018

CURRENT AFFAIRS May 2018

# உத்ரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாக அமைச்சரவை கூட்டம், 'தெஹிரி'(Tehri Lake) ஏரியில் உள்ள மிதக்கும் உணவகத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது

# இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் ரயில் நிலையம் என்ற பெருமையை அசாம் மாநிலத்தில் உள்ள 'குவஹாத்தி' (Guwahati) ரயில் நிலையம் பெற்றுள்ளது

# தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் "ஏ பி டிவில்லியர்ஸ்" (AB Devilers) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

# ICC கிரிக்கெட் கமிட்டியில் பயிற்சியாளர்களுக்கான பிரதிநிதியாக(Coach Representative) நியூசிலாந்து பயிற்சியாளர் "மைக் ஹெஸ்ஸன்" (Mike Hesson) நியமிக்கப்பட்டுள்ளார்

# 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பதக்கம் வெல்லும் சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் 135 இளம் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதலில் சிறப்பு பயிற்சி அளிக்க "ககன் நரங்க்"(Gagun Narang) "Project Leap" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்

# 5வது முறையாக ஐரோப்பிய கால்பந்து தங்க காலணியை(European Golden Shoe) "லியோனல் மெஸ்ஸி"(Lionel Messi) வென்றுள்ளார்

# தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியாவின் 'சத்யன் ஞானசேகரன்'(Satyan Ganasekaran) மற்றும் 'சனில் ஷெட்டி'(Sanil Shetty) ஜோடி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதெ

# ஜெர்மனியின் முனிச்(Munich) நகரில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியின் நடுவர் குழுத் தலைவராக இந்தியாவின் "பவன் சிங்"(Pawan Singh) நியமிக்கப்பட்டுள்ளார்

# ஆசிய பாட்மின்டன் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவின் "ஹிமாந்த் பிஸ்வா சர்மா"(Himanta Biswa Sarma) நியமிக்கப்பட்டுள்ளார்

# ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்ப்ன் ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி "கொரியா" கோப்பையை வென்றுள்ளது

# ஆசிய ஜீனியர் தடகள சாம்பியன்சிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் 'ஜிபு'(Gifu)  நகரில் ஜீன் மாதம் தொடங்க உள்ளன

# துருக்கியின் அண்டாலயா(Antalya) நகரில் நடைபெறும் வில்வித்தை(Archery) உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் பெண்கள் அணி வெள்ளி வென்றுள்ளது, வீரர்கள் விவரம் பின்வருமாறு
- 'ஜோதி சுரேகா வேனம்' (Jyothi Surekha Vennam)
- 'திவ்யா தயால்' (Divya Dhayal)
- 'முஸ்கான் கிரார்' (Muskan Kirar)

மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது, வீரர்கள் விவரம் பின்வருமாறு
- 'அபிஷேக் வர்மா' (Abishek Verma)
- 'ஜோதி சுரேகா வேனம்' (Jyothi Surekha Vennam)

# தாமஸ் மற்றும் உபர்(Thomas and Uber) கோப்பை பாட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் "பாங்காங்க்"(Bangkok) நகரில் தொடங்கியுள்ளது
- Thomas Cup- ஆண்களுக்கான குழு சாம்பியன்சிப் போட்டியாகும்
- Uber Cup- பெண்களுக்கான குழு சாம்பியன்சிப் போட்டியாகும்

# ஜெர்மனியின் "ஹாம்பர்க்"(Hamburg) நகரில் பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

# மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் என்ற பெருமையை "கோவிந்த் சிங் த்யோ" (Gobind Singh Deo) பெற்றுள்ளார்

# சீனாவிலுள்ள அனைத்து மசூதிகளிலும் கட்டாயமாக அந்த நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் எனவும், சீன அரசியல் சாசனம், பொதுவுடைமை கொள்கைகள் ஆகியவை பயிலப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது

# "ஒன்-ஸ்பேஸ்"(One Space) என்ற தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது, ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்தில் பாயக் கூடிய அந்த ராக்கெட்தான் சீனாவிலிருந்து செலுத்தப்படும் முதல் தனியார் நிறுவன ராக்கெட் ஆகும்

# உலகின் முதல் மிதவை அணுமின் நிலையம்(World's First Floating Nuclear Power Plant) ரஷ்யாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

# பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முதல் முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளனர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி "அருணா ஜெகதீசன்" (Aruna Jagadeesan)நியமிக்கப்பட்டுள்ளார்.

Afr Asia வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் செல்வச் செழிப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடம்(6th Wealthiest Country) பிடித்துள்ளது

வறட்சி, பனிமலை உருகுதல், கடல் நீரின் அளவு அதிகரித்து வருவது ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக 2 பிரத்யேக 'இரிடியம்'(Iriduim) வகை செயற்கைகோள்கள் மற்றும் "GRACE-FO" செயற்கைகோளை NASA விண்ணில் 'FALCON-9' ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது

முதல் முறையாக நிலவின் இருண்ட பகுதிகளைக்(Moon’s far side) குறித்து ஆய்வுச் செய்வதற்கான "Queqiao" அல்லது "Magpie Bridge" என்று பெயரிடிட்ட புதிய செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக