செவ்வாய், 14 நவம்பர், 2017

TNPSC-TET-VAO தேர்வுக்குறிப்புகள் 001.


TNPSC-TET-VAO தேர்வுக்குறிப்புகள் 001.

1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
13. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
16. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
17. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
18. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
19. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
20. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
21. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
22. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
23. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
24. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
25. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
26. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
27. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
28. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
29. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
30. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
31. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
32. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
33. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
34. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
35. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
36. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
37. உண்டாட்டு - கள்குடித்தல்
38. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
39. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
40.)உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
41.)உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
42.)உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
43) உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
44.)உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
45). உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
46.)உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
47.)உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
48.)உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
49.) உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
50.) சிற்றிலக்கியங்கள் காலம் 1350 முதல் 1750. வரை
51) சிற்றிலக்கிய வேந்தர்  குமரகுருபரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக