செவ்வாய், 24 ஜூலை, 2018

பொது அறிவு வினா விடை கணிதம் TNPSC CCSE-IV

 பொது அறிவு வினா விடை கணிதம்
TNPSC CCSE-IV

திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வு

1. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் U,A,B,C என்ற 3 நபர்களின் மொத்த சம்பளங்களின் சராசரி ரூ.15000. அவர்களின் சம்பள விகிதம் 3 : 5 : 7 எனில் அவர்களின் சம்பளங்களில் குறைந்த சம்பளம் பெறுபவர் யார் அவரின் தொகை எவ்வளவு?

விடை : குறைந்த சம்பளம் பெறுபவர் A, ரூ.9000

விளக்கம் :
A : B : C = 3x : 5x : 7x
3 நபர்களின் மொத்த சம்பளம் = சராசரி * 3
= 15000 * 3
= ரூ.45000
3 நபர்களின் மொத்த விகிதம் = 3x+ 5x + 7x + = 15x
15x = 45000
x = 3000
மூவரின் சம்பளத்தில் குறைந்த அளவு தொகை பெறுபவர் A = 3x = 3 * 3000
= ரூ.9000

2. 10 எண்களின் சராசரி 18. ஒவ்வொரு எண்ணுடனும் 5 ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன?

விடை : 23

விளக்கம் :
10 எண்களின் மொத்த மதிப்பு = சராசரி * எண்ணிக்கை
= 18 * 10
= 180
அதிகரித்த மதிப்பு = 5 * 10 = 50
10 எண்களின் புதிய மதிப்பு = 180+ 50 = 230
10 எண்களின் புதிய சராசரி = 230 / 10 = 23

10 எண்களின் புதிய சராசரி = 23.

3. வளவன் என்பவர் ஒரு மிதி வண்டியை ரூ.1400 க்கு வாங்கி 15% நட்டத்திற்கு விற்றார். எனில் விற்றவிலை என்ன.

விடை : ரூ.1190

விளக்கம் :
நட்டம் = (நட்ட சதவீதம் / 100)* வாங்கிய விலை
= (15/100)* 1400
= ரூ.210
விற்றவிலை = வாங்கிய விலை - நட்டம்
= 1400 - 210 = 1190

விற்ற விலை
= ரூ.1190

4. ஓர் அரைக்கோளத்தின் வளைபரப்பு 1232 செ.மீ3. இதன் விட்டத்தைக் காண்க.

விடை : 28 செ.மீ

விளக்கம் :
அரைக்கோளத்தின் வளைபரப்பு
 = 1232
2πr2 = 1232
r2 = 1232 / 2π
r2 = (1232 * 7) / ( 2 * 22 )
r2 = 196
r = 14 செ.மீ
விட்டம் d=  2r
= 2 * 14 = 28

விட்டம் d = 28 செ.மீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக