ஞாயிறு, 22 ஜூலை, 2018

TNPSC முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு.. உடனே படிங்க.

TNPSC முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு.. உடனே படிங்க.


டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழக சட்டபேரவையில் கடந்த ஜுன் 1ந் தேதி தமிழக முதல்வர் விதி எண் 110ன் கீழ், டி.என்.பி.எஸ்.சி குருப் தேர்வுகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவித்தார். இதனையடுத்து அவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழக அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுகளுக்கான வயது வரம்பு எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி வகுப்பினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும், பொதுப்பிரிவினருக்கு (ஓ.சி.) 30 வயதிலிருந்து 32 வயதாகவும் உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.
குஜராத், அரியானா, பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருப்பதைப் போல டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 40 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 வயதாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அவ்வாறு உயர்த்த இயலாவிட்டால் குறைந்தபட்சம் இந்த வயது வரம்புக்குள் இருப்பவர்களுக்கு தேர்வெழுதவாவது ஒரு வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக