ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

நீலத் திமிங்கலத்தைப் பற்றி அறியாத தகவல்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

நீலத் திமிங்கலத்தைப் பற்றி அறியாத தகவல்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

 உலகிலுள்ள தாவர, விலங்கினங்கள் பல்வேறு வகையாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் பாலுட்டிகள் என்பவை ஒரு வகை விலங்கினங்களாகும். பாலுட்டி விலங்கினங்கள் குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய குணத்தைக் கொண்டவை.
உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத்திமிங்கலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் (அதாவது 5 மாடிக்கட்டிட உயரம்) 150 டன் எடையுள்ளதாக வளரக்கூடியது.
நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை மட்டுமே சுமார் 907 கிலோ.
நீலத்திமிங்கலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இத்தகைய ராட்சதத்தனமான அளவை விட திமிங்கலத்திடம் ராட்சதத்தனமான குணங்கள் கிடையாது.

உண்மையில் திமிங்கலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட பாலுட்டி விலங்கினங்களாகும். திமிங்கலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதிலை. அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
திமிங்கலங்கலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை தலைப்பகுதியில்.. அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக்கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடி.. உள்ளது. சில திமிங்கலங்களில் ஒரு துவாரம் உள்ள மூக்கையும், சில வகை இரு துவார மூக்கையும் கொண்டுள்ளன.

 திமிங்களங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. ஸ்பெர்ம் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும்.
திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது.

இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனை மட்டுமே நமது நுரையீரலால் எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஆனால் திமிங்கலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
திமிங்கலங்கள் மீன்களா ? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில். திமிங்கலங்கள் பாலுட்டிகள் என்றழைப்பதுதான் சரியாகும். மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கலங்கள் வேறுபட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக