செவ்வாய், 30 அக்டோபர், 2018

குதுப்மினார் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் வாங்க பார்க்கலாம்...

குதுப்மினார் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் வாங்க பார்க்கலாம்...

இந்தியாவிலேயே உயர்ந்த கோபுரமாக குதுப்மினார் கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை இக்கோபுரத்தின் மீதிருந்து கண்காணித்துள்ளனர்.
1)இப்போதும் டெல்லி மற்றும் அதன் அருகில் வாழும் மக்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் பயன்பட்டு வருகிறது.
2)கி.பி. 1192 இல் டெல்லியை ஆண்ட முதல் மன்னர் துருக்கியரோடு ஏற்பட்ட போரில் இறந்தார். பின்பு, இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்களும் அவர் வாரிசுமே ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்புவரை ஆண்டனர்.
3)கி.பி. 1200 ஆம் ஆண்டு வெற்றியின் சின்னமாக குதுப்மினார் கோபுரம் எழுப்பப்பட்டது. அடிமை அரசர்கள் (Slave dynasty) என்ற சுல்தான் குதபுதீன் என்பவர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
4)இவரது மருமகன் இல்தத் - மூஷ் என்பவரால் கோபுரம் வடிவமைக்கப்பட்டு 12-11-1236 இல் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 14,15 ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட மன்னர்களால் பழுது பார்த்துச் சரி செய்யப்பட்டுள்ளது.
5)ஆரம்ப காலத்தில் 7 அடுக்குகளுடன் 300 அடி உயரத்துடன் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, 5 அடுக்குகளுடன் 233 அடி உயரத்துடன் காணப்படுகிறது.
6)உச்சிக்குச் செல்ல 379 வட்ட வடிவில் அமைந்த படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொரு மாடியும் ஒரு பால்கனியாக தனித்தனியாக உள்ளது. முதல் மாடி சிவப்புக் கற்கள் பதித்து காண்போர் கண்களையும் கருத்தையும் ஆக்ரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
7)குதுப்மினார் அருகில் மெஹ்ராலி என்ற இடத்தில் உள்ளது. பழங்கால இந்தியாவின் அதிசயச் சின்னமாகவும் கருதப்படுகிறது. மழை, வெயிலினால் இந்த இரும்புத் தூண் எந்த வகையிலும் பாதிப்பு அடையவில்லை என்பதே இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது.
8)உறுதியான இரும்பினால் 32 அடி 8 அங்குல உயர ஸ்தூபியாக உள்ளது. அடிப்பாகம் 6 அடி 4 அங்குலத்துடனும், உச்சி 2 அடி 4 அங்குலப் பருமனுடனும் காணப்படுகிறது. இதனை, 8 இரும்புக் கம்பிகளால் பூமிக்கடியில் கட்டி உறுதியாகவும் உயரமாகவும் நிறுவியுள்ளனர்.
9)குப்தர் காலத்தில் (கி.பி. 375) கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் தோற்றம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
10)குதுப்மினாருக்குத் தென்கிழக்குப் பாகத்தில் காணப்படும் பெரிய நுழைவு வாயிலின் பெயரே அலாய் டார்வாஜா. உலகின் பெரிய உன்னத கேட் என்றும் அழைக்கப்படுகிறது.
11)கி.பி. 1310 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியால் சிவப்பு வண்ணக் கற்களைப் பயன்படுத்தி எழில்மிகு தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாயில் சதுரமானதாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. 35 1/2 அடி உள்புற அகலத்துடனும் 55 1/2 அடி வெளிப்புற அகலத்துடனும் 47 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
12)தரைப் பாகத்திலிருந்து உள்ள கூரையின் கனம் 11 அடியாகும்.
குதுப்மினாரில் மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த இந்த கேட்டின், வெளிப்புற உள்புற வேலைப்பாடு, இந்தியா மட்டுமல்ல வேறு எங்கும் இதுபோல் பார்க்க முடியாத உலகிலேயே சிறந்த வாயில். உலகின் மற்ற நேர்த்திவாய்ந்த வேலைப்பாடுகளுடன் அமைந்தவற்றுடன் போட்டி போடுமளவுக்குச் சிறந்து விளங்குகிறது.
13)உலக வரலாற்றில் குதுப்மினார் கோபுரம், இரும்புத்தூண், அலாய் டார்வாஜா ஆகியன உயிரோவியங்கள் என்ற பான்ஷேப் கூற்று நினைவுகூறத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக