செவ்வாய், 30 அக்டோபர், 2018

இதுவரை நீங்கள் அறியாத விசித்திரமான உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

இதுவரை நீங்கள் அறியாத விசித்திரமான உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

நாம் நமது அன்றாட வாழ்வில் பல விசித்திரமான மற்றும் வினோதமான பொருள்கள் மற்றும் செயல்களை கடந்து வந்துள்ளோம். அவற்றை பற்றி தெரிந்தால் அட அட என்று ஆச்சர்யபடுவீர்கள்.
1)லிப்ஸ்டிக்
பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
2)ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.
3)இறால்
கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
4)நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.
5)பட்டாம்பூச்சி
இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.
6)யானை
பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
7)ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
8)நெருப்புக்கோழி
உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.
9)புகைப்பிடித்தல்
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
10)முழங்கை ட்ரிக்
கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக