ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

முதன் முதலில் உலகைச் சுற்றிய உயிரினம்..



முதன் முதலில் உலகைச் சுற்றிய உயிரினம்..

உலகை அறிவோம்.. ஒரு வரியில்..!!
முதன் முதலில்..!!
🌟 பின்லாந்தில் முதன் முதலில் ஜி.எஸ்.எம். வகை தொழில்நுட்பத்தில் முதல் போன் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

🌟 இந்திய தீயணைப்பு துறையில் முதன் முதலில் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி மீனாட்சி விஜயகுமார்.

🌟 இந்தியாவில் முதன் முதலில் தேசிய வருமானம் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு 1867.

🌟 டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் கண்ணில் முதன் முதலில் விழி வெண்படல அறுவை சிகிச்சை செய்தார்.

🌟 கடல் அலை மூலம் முதன் முதலில் மின்சாரம் தயாரித்த நாடு பிரான்ஸ்.

🌟 இந்திய அறிவியல் விருது முதன் முதலில் பெற்ற இந்தியர் ஊ.N.சு.ராவ் ஆவார்.

🌟 ராக்கெட்டினை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் சீனர்கள்.

🌟 சமம் என்பதற்கு அடையாளமான ஸ்ரீ என்ற குறியீடு முதன் முதலில் 1557ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

🌟 டிஜிட்டல் ரேடியோ (எல் பேண்ட் ரேடியோ) முதன் முதலில் இயக்கி காட்டப்பட்ட ஆண்டு 1990.

🌟 திருக்குறள் முதன் முதலில் 1812ஆம் ஆண்டு ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது.

🌟 முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.

🌟 முதன் முதலில் சூரிய கிரகணம் பாபிலோனியாவில் பதிவு செய்யப்பட்டது.

🌟 உலகில் முதன் முதலில் வேலைவாய்ப்பு அலுவலகங்களை தொடங்கிய நாடு அமெரிக்கா.

🌟 லைக்கா என்ற நாய்தான் விண்வெளியில் முதன் முதலில் உலகைச் சுற்றிய உயிரினமாகும்.

🌟 இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலில் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக