புதன், 8 ஏப்ரல், 2020

நம் ஆடைக்கு பயன்படுத்தும் பருத்தி எப்படி உருவானது என்று தெரியுமா?

நம் ஆடைக்கு பயன்படுத்தும் பருத்தி எப்படி உருவானது என்று தெரியுமா?


பருத்தி அயன் மற்றும் துணை அயனப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும்.செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது. அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. பிரித்தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்டமைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றுமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும், பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன.
பிரித்தானிய, பிரான்சிய வணிகர்கள் எகிப்தியப் பெருந்தோட்டங்களில் பெரும் முதலீடுகளைச் செய்தனர். எகிப்தின் அரசுத் தலைவரான இஸ்மாயிலும் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பெருந்தொகை கடன் பெற்றிருந்தார். 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் எகிப்தின் பருத்தியைக் கைவிட்ட பிரித்தானியரும், பிரான்சியரும் மீண்டும் மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கத் தொடங்கினர். இதனால், எகிப்து பணப் பற்றாக்குறையினால் 1876 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்தது. இது 1882ல் எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகியது.
1840களில், இயந்திரமயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும், விலை குறைவான பருத்தியைக் கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது. அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம்கொசிப்பியம் பார்படென்சு ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் செய்கை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின. இது கூலி பெறாத அடிமைகளினால் உற்பத்தி செய்யப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ,புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர்.
தற்போது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் 2015 ஆண்டின் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா பருத்தி உற்பத்தியில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. [1] பிடிக்க வாய்ப்பு அதிக அளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக