ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

🍭 அதியமானுக்கு நெல்லிக்கனி ஈந்தவர் - ஔவையார்
🍭 நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் சமாதானம் செய்து வைத்தவர் - கோவூர்கிழார்
🍭 வரி போடும் முறையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்திப் பாடியவர் - பிசிராந்தையார்
🍭 பாரியோடு நட்பு பாராட்டியவர் - கபிலர்
🍭 பேகன், அவன் மனைவி கண்ணகியைப் பிரிவதைத் கடிந்து உரைத்தவர் - பரணர்
🍭 முரசு கட்டிலில் படுத்துறங்கிய புலவர் - மோசிகீரனார்
🍭 மலையமான் கிள்ளிவளவன் கொல்லாமல் காத்தவர் - பிசிராந்தையார்
🍭 கோப்பெருஞ்சோழன் நண்பன் - பிசிராந்தையார்
🍭 முடி நரைக்காததற்கு காரணம் கூறி பாடியவர் - பிசிராந்தையார்
🍭 அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியவர் - கபிலர்
🍭 இலக்கண நூல் இயற்றிய பெண்பாற் புலவர் - காக்கை பாடினியார்
🍭 புத்த மதத்தைச் சேர்ந்த சங்க புலவர் - இளம்போதியார்
🍭 சமண மதத்தை சேர்ந்த புலவர் - உலோச் சனார்
🍭 கணைக்கால் இரும்பொறை கவிதை பாடி மீட்டவர் - பொய்கையார்
🍭 இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றர் எனக்கருதி கொல்ல முயன்ற நெடுங்கிள்ளியை தடுத்தவர் - கோவூர்க்கிழார்
🍭அதிக பாடல்கள் பாடிய சங்ககால பெண்பாற் புலவர் - ஔவையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக