செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

TNPSC-TET பொதுத்தமிழ் - இலக்கியம் - ஐங்குறுநூறு தொடர்பான செய்திகள்

TNPSC-TET  பொதுத்தமிழ் - இலக்கியம் - ஐங்குறுநூறு தொடர்பான செய்திகள்

1. ஐங்குறுநூறு நூல் எத்தனை அகத்திணைப் பாடல்களைக் கொண்டுள்ளது - 500

2. அகத்திணையில் ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ள நூல் எது - ஐங்குறுநூறு

3. ஐங்குறுநூறு நூலில் உள்ள பாவகை எது? - ஆசிரியப்பா

4. எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று .................. ஆகும் - ஐங்குறுநூறு

5. ஐங்குறுநூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்? - பெருந்தேவனார்

6. ஐங்குறுநூறு நூலில் மூன்றடி சிற்றெல்லையும் .................. பேரெல்லையும் கொண்ட நூல் ஆகும் - ஆறு அடி

7. ஐங்குறுநூறில் மருதத் திணைப் பாடல்களைப் (100) பாடியவர் யார்? - ஓரம்போகியார்

8. ஐங்குறுநூறில் நெய்தல் திணைப் பாடல்களைப் (100) பாடியவர் யார்? - அம்மூவனார்

9. ஐங்குறுநூறில் குறிஞ்சித் திணைப் பாடல்களைப் (100) பாடியவர் யார்? - கபிலர்

10. ஐங்குறுநூறில் பாலைத் திணைப் பாடல்களைப் (100) பாடியவர் யார்? - ஓதலாந்தையார்

11. ஐங்குறுநூறில் முல்லைத் திணைப் பாடல்களைப் (100) பாடியவர் யார்? - பேயனார்

12. ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? - கூடலூர் கிழார்

13. ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுப்பித்தவர் யார்? - யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

14. 1903-ம் ஆண்டு ஐங்குறுநூறு நூலை முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் யார்? - உ. வே. சாமிநாதையர்

15. அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் மற்றும் உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் .................. நூல்களில் அமைந்துள்ளது? - ஐங்குறுநூறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக