வெள்ளி, 27 டிசம்பர், 2019

2019 - இந்திய விருதுகள் - பகுதி-2


2019 - இந்திய விருதுகள் - பகுதி-2

தமிழகம் :
🏆 சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருதை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.

🏆 மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேகமாக பு%2Bங்கா அமைத்ததற்காக சீர்மிகு நகரத் திட்ட கவுன்சில் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

🏆 நீர் வளத்தை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கூறி, தமிழகத்துக்கு மூன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

🏆 அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனுக்கு தந்தை பெரியார் விருதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

🏆 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பு%2Bண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் மறைந்த நெல் ஜெயராமனின் இயற்கை வேளாண் பண்ணைக்கு அட்மா திட்டத்தின் கீழ், சிறந்த வேளாண் சேவைக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

🏆 உடல் உறுப்பு தானத்தில் 5-வது முறையாக முதல் இடம் பெற்ற தமிழகத்திற்கு மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் விருது வழங்கினார்.

🏆 பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியோர்க்கு தமிழக அரசால் வழங்கப்படும், பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதானது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டுத் துறை :
🏆 6-வது முறையாக தங்கப் பந்து விருதை கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தட்டி சென்றார்.

🏆 சிறந்த வீரருக்கான லாரஸ் விருதை, செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் வென்றார்.

🏆 இந்தியாவின் முதல் கால்பந்து ரத்னா விருது சுனில் சேத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

🏆 ஆசியன் ஹhக்கி சம்மேளனத்தின் 2018-ம் ஆண்டின் சிறந்த ஹhக்கி வீரருக்கான விருது இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங்க்கு வழங்கப்பட்டுள்ளது.

🏆 இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🏆 தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்குக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

🏆 சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான விருது :
🏆 மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வாங்கி கொடுத்த, பெண் போலீஸ் அதிகாரி, சாயா சர்மா, 2019-ம் ஆண்டுக்கான ஆசிய சமூக மாற்றத்துக்கான விருதினை பெற்றார்.

🏆 குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பு%2Bஜா தேசாய் என்ற இளம் பெண் இந்த ஆண்டுக்கான மிஸஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக