ஞாயிறு, 29 டிசம்பர், 2019

2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள்...!!


📺2019 சினிமா.. திரைப்பட விருதுகள்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி🏆
2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள்...!!
திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமானதாக கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். இந்த விருதுகள் திரைப்படத்துறையில் சிறப்பாக நடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமா விருதுகளில் மிகவும் கௌரவம் வாய்ந்த விருதாக தேசிய திரைப்பட விருதுகள் கருதப்படுகின்றன.

🌟சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி திரைப்படம்)

🌟சிறந்த நடிகர் - ஆயுஷ்மான் குர்ராணா (பதாய் ஹோ திரைப்படம்), விக்கி கௌஷல் (உரி திரைப்படம்)

🌟சிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி யாக்காந்தி

🌟சிறந்த திரைப்படம் - ஹெல்லாரோ (குஜராத்தி)

🌟சிறந்த இயக்குநர் - ஆதித்யா தார் (உரி திரைப்படம்)

🌟சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பதாய் ஹோ திரைப்படம் (ஹிந்தி)

🌟சமூக நலனுக்கான சிறந்த திரைப்படம் - பேட்மேன் திரைப்படம் (ஹிந்தி)

🌟சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த திரைப்படம் - பானி திரைப்படம் (மராட்டியம்)

🌟சிறந்த துணை நடிகர் - சுவானந்த் கிர்கிரே (சும்பக் திரைப்படம்)

🌟சிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ திரைப்படம்)

🌟நர்கிஸ் தத் விருது - ஒண்டல்ல இரட்டல்ல திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த நடன இயக்கம் - க்ருதி மஹேஷ் மிட்யா மற்றும் ஜோதி டி டொம்மார் (பத்மாவத் திரைப்படம்)

🌟சிறந்த சண்டை இயக்கம் - கே.ஜி.எஃப் திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த பஞ்சாபி திரைப்படம் - ஹர்ஜீதா திரைப்படம்

🌟சிறந்த அசாமி திரைப்படம் - புல்புல் கேன் சிங் திரைப்படம்

🌟சிறந்த தமிழ் திரைப்படம் - பாரம் திரைப்படம்

🌟சிறந்த தெலுங்கு திரைப்படம் - மகாநடி திரைப்படம்

🌟சிறந்த மலையாள திரைப்படம் - சுண்டனி ஃபிரம் நைஜீரியா திரைப்படம்

🌟சிறந்த வசனம் - தாரிக் திரைப்படம் (வங்காளம்)

🌟சிறந்த குழந்தை நட்சத்திரம் - பி.வி.ரோகித், சாகிப் சிங், தாளா அர்ஷத் ரேஷி மற்றும் ஸ்ரீநிவாஸ் போகலே

🌟சிறந்த ஒலி வடிவமைப்பு - தீபக் சாட்டர்ஜீ (உரி திரைப்படம்)

🌟சிறந்த படத்தொகுப்பு - நதிசரமி திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - கம்மார சம்பவம் திரைப்படம் (மலையாளம்)

🌟சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ஆவ் திரைப்படம் (தெலுங்கு)

🌟சிறந்த ஆண் பாடகர் - அர்ஜித் கிங் (பத்மாவத் திரைப்படம்)

🌟சிறந்த ஆடை வடிவமைப்பு - மகாநடி திரைப்படம் (தெலுங்கு)

🌟சிறந்த இசை இயக்குநர் - சஞ்ஜய் லீலா பன்சாலி (பத்மாவத் திரைப்படம்)

🌟சிறந்த பாடல் வரிகள் - நதிசரமி திரைப்படம் (கன்னடம்)

🌟சிறந்த திரைக்கதை (அசல்) - சி லா சோ திரைப்படம் (தெலுங்கு)

🌟சிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன் திரைப்படம் (ஹிந்தி)

🌟சிறந்த ஹிந்தி திரைப்படம் - அந்தாதுன் திரைப்படம் (ஹிந்தி)

🌟சிறந்த சிகை அலங்காரம் - ஆவ் திரைப்படம் (தெலுங்கு)

🌟திரையுலகிற்கு ஏற்ற மாநிலம் - உத்தரகாண்ட்

🌟சிறப்பு விருது - சுருதி ஹரிஹரன், சந்திசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக