வியாழன், 26 டிசம்பர், 2019

2019-ல் இந்தியாவின் சாதனைகள்..!!



2019... 💪சாதனைக்கு வயது உண்டா?🏆 நிரூப்பித்தவர்கள்..!

2019-ல் இந்தியாவின் சாதனைகள்..!!

இந்த 2019ம் ஆண்டில் நமது இந்தியா நிகழ்த்திய சாதனைகள் எண்ணற்றவை, இவை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அத்தகைய அளப்பரிய சாதனைகள் என்னவென்று தெரிந்துகொள்வோம்....!

தமிழ்நாடு
🏆தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்று, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது.

🏆சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனம் சார்பில், உலக அமைதியை வலியுறுத்தி, 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவிகளின் வௌ;வேறு முகங்களை வரைந்து கின்னஸ் சாதனை படைத்தது.

🏆புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

🏆விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் சிறுமியின் இருதய வால்வில் ஏற்பட்டிருந்த வீக்கத்தை சரிசெய்ய, சவால் நிறைந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் குழு சாதனை படைத்துள்ளது.

🏆விஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ரோபோவை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கி உள்ளது.

🏆யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த, பிரிஷாவிற்கு ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

🏆தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், ஒரே நாளில் 59,839 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

🏆புதுக்கோட்டையை சேர்ந்த, பல் மருத்துவர் ராஜேஷ்கண்ணன் என்பவர் கின்னஸ் சாதனை முயற்சிக்காக, 33.3 அடி உயரத்தில் செயற்கை பல் ஒன்றை, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வடிவமைத்தார். இந்த 33.3 அடி உயர செயற்கை பல், கின்னஸ் சாதனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்று, சிவபுராணத்தின் பொருளை உணர்த்தும் பாடலுக்கு 20 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியமாடிய நிகழ்ச்சி, கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

🏆உலக அளவில் மிகக் குறைந்த வயதில் அபாகஸ் என்ற கணித முறையின் 8 படிநிலைகளை வென்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த கலைமதி (6 வயது) பெற்றுள்ளார்.

🏆மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

🏆சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுமி தீபிகா, ஆங்கிலத்தில் நாவல் எழுதி சாதனை படைத்துள்ளார்.

🏆சிலம்பம் போட்டியில் வெற்றிகளை குவித்து இந்தியா புக் ஆப் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார் சூளகிரியை சேர்ந்த 4 வயது சிறுவன் தரஸ்வின்.

🏆பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தை நினைவுக்கூறும் வகையில், பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் நரேந்திர மோடி, ஜீ ஜின்பிங் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் 3டி முறையில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.

🏆சேலம் மாவட்டம், உலிபுரத்தை சேர்ந்த, 2 வயது சிறுமி சஹானாஆப்ரீன், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், அற்புத குழந்தையாக இடம்பெற்றுள்ளார். இச்சிறுமி எந்த பொது அறிவு கேள்வியாக இருந்தாலும் சரியாக பதிலளிக்கிறார்.

🏆ஒரே ஆண்டில், 682 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டு சென்னை ஐ.ஐ.டி. சாதனை படைத்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக