செவ்வாய், 24 டிசம்பர், 2019

பண்பலை ஒலிபரப்பு பற்றிய தகவல்கள்!


பண்பலை ஒலிபரப்பு பற்றிய தகவல்கள்!

பண்­பலை என்­பது எப்.எம். என்­ப­தன் தமி­ழாக்­கத்தை குறிக்­கி­றது. இன்­றைக்கு எப்.எம். ரேடி­யோக்­கள் இளை­ஞர்க ளையும், இசை­யை­யும் ஆள்­கி­றது. 'வானெலி அர­சுக்கு மட்­டும் சொந்­த­மில்லை. அது மக்­க­ளுக்­கா­னது' என்ற உச்­ச­நீதி மன்ற தீர்ப்­பொன்­றின் விளைவே தற்­போது இந்­திய ஒலி உல­கத்தை ஆக்­கி­ர­மித்­துள்ள தனி­யார் ஒளி­ப­ரப்­புக்­கள், வானொலி அலை­களை அவை பர­வும் விதத்தை வைத்து இரண்டு வகை­யா­கப் பிரிக்­க­லாம். அவை மீடி­யம் வேவ் என்­கிற மத்­திய அலை­யும், சார்ட் வேவ் என்­கிற சிற்­ற­லை­யும் ஆகும். இந்த இரண்­டை­யும் ஒன்று சேர்த்து ஆம்­பி­ளி­டி­யுட் மாடு­லே­ஷன் என்று அழைக்­கி­றார்­கள்.
இதில் வேறொரு அலை இயல்பு 'பிரிக்­வன்சி மாடு­லே­ஷன்' அதா­வது எப்.எம். என்­கிற பண்­பலை எப்.எம்.மின் சிறப்­பி­யல்பு என்­ன­வென்­றால், குறைந்த துாரத்­திற்கு சமச்­சீ­ரான ஒலி­ப­ரப்பு என்­பதே.
ஒலி­ப­ரப்பு வகை­க­ளில் இந்த ஒளி­ப­ரப்பே தனி ஒரு மதிப்பு பெற்­றுள்­ளது. இது ஒரு அதி­ச­யம்­தான். இந்த அதி­ச­யம் இந்­தியா முழு­மைக்­கும் நேர்ந்­துள்­ளது.
பண்­பலை ஒலி­ப­ரப்­பு­க­ளின் உரி­மை­யா­ளரை வைத்து இரண்டு வித­மாக பிரிக்­க­லாம். பிர­சார் பாரதி என்­னும்  தன்­னாட்சி உரிமை பெற்ற இந்­திய ஒலி­ப­ரப்­புக் கழ­கத்­தின் கீழ் இயங்­கும் அகில இந்­திய வானொ­லி­யின் கட்­டுப்­பாட்­டில் செயல்­ப­டும் பண்­பலை நிலை­யங்­கள் ஒரு­வகை.
இந்­திய அர­சின் செய்தி மற்­றும் ஒலி­ப­ரப்பு அமைச்­ச­கத்­தின் நேரடி அனு­மதி பெற்று இயங்­கும் தனி­யார் பண்­பலை நிலை­யங்­கள் இன்­னொரு வகை.
இந்த இரு வகை ஒலி­ப­ரப்பு நிலை­யங்­க­ளுமே இப்­போது நேர்ந்­துள்ள பண்­ப­லைப் புரட்­சிக்கு வித்­திட்­டவை. பண்­ப­லை­யின் ஒலி­ப­ரப்பு உயர் தொழில்­நுட்­பம் சார்ந்­தது. அத­னால் அதன் ஒலி­ப­ரப்பு செவிக்கு இனி­மையை கொடுக்­கி­றது.
நிகழ்ச்­சி­க­ளி­லும் வழக்­க­மான தன்மை மாறி­யுள்­ளது. கேட்க மட்­டுமே இருந்த நிகழ்ச்­சி­க­ளில், நேயர்­க­ளும் பங்­கேற்­கும் நேரடி ஒலி­ப­ரப்பு நிகழ்ச்­சி­க­ளும் பண்­ப­லை­யில் மட்­டுமே சாத்­தி­ய­மா­னது. ஒரு மணி நேரத்­தில் 20 முதல் 40 வரை உயர்ந்­துள்­ளது. ஒலி­ப­ரப்பு மொழி­யும், மக்­கள் பேசும் வழக்கு மொழி­யாக மாறி­யுள்­ளது. இதுவே மக்­க­ளி­டம் செல்­வாக்­கைப் பெற்­றுத் தந்­துள்­ளது.
இந்­தி­யா­வின் முதல் பண்­பலை வானொலி ஒலி­ப­ரப்பு 23.7.1977ல் சென்­னை­யில் தொடங்­கப்­பட்­டது. ஆனா­லும் பண்­ப­லை­யின் வளர்ச்சி சிக­ரத்தை எட்­டி­யது கடந்த 10 ஆண்­டு­க­ளில்­தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக