ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - அளவீடுகள்
SI அலகுகள் :
(System International Units)
👉 உலகின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு அலகு முறையை நீளம், நிறை, காலம் முதலியவற்றை அளக்கப் பயன்படுத்தி வந்தனர். அவற்றுள் சில.
1. FPS முறை
👉 அடி, பவுண்டு, வினாடி
(FPS - குழழவஇ Pழரனெஇ ளுநஉழனெ)
2. CGS முறை
👉 சென்டிமீட்டர், கிராம், வினாடி
(CGS- ஊநவெiஅநவசநஇ புசயஅஇ ளுநஉழனெ)
3. MKS முறை
👉 மீட்டர், கிலோகிராம், வினாடி
(MKS - ஆநவசநஇ முடைழபசயஅஇ ளுநஉழனெ)
👉 பல அலகு முறைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க உலகில் உள்ள எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பன்னாட்டு அலகு முறை 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதனை SI அலகு முறை என்பர்.
SI அலகு முறையில் அடிப்படை அளவுகளான நீளம், நிறை, காலத்தின் அலகுகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
நீளம் :
👉 நீளம் என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகும். நீளத்தின் SI அலகு மீட்டர்.
👉 நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் 30 மீட்டர் வரை இருக்கும்.
நீளத்தின் பன்மடங்குகளும் துணைப் பன்மடங்குகளும் :
👉 ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடைப்பட்ட தொலைவை கிலோமீட்டர் போன்ற அதிகமான நீளஅலகாலும், குறைந்த நீளங்களான பென்சிலின் நீளம், பேனா முனையின் நீளம் போன்றவற்றைச் சென்டிமீட்டர் மற்றும் மில்லிமீட்டர் போன்ற அலகுகளாலும் அளவிடுகிறோம். இதனையே நீளத்தின் பன்மடங்குகள், துணைப் பன்மடங்குகள் என்கிறோம்.
நீளத்தின் பன்மடங்குகள் :
கிலோ மீட்டர்
துணை பன்மடங்குகள் :
1. மில்லிமீட்டர்
2. சென்டிமீட்டர்
மற்றவை :
1 மீட்டர் = 1000 மில்லிமீட்டர்
1 மீட்டர் = 100 சென்டிமீட்டர்
1 கிலோமீட்டர் = 1000 மீட்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக