TET தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு !!
📝 ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 தாள் 2-க்கான தேர்வு இன்று நடைபெறுகிறது.
📝 தேர்வு அறைக்கு அரைமணி நேரம் முன்னதாகவே செல்ல வேண்டும். ஹhல் டிக்கெட்டை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும்.
📝 தேர்வு மையத்தில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு இன்னொரு புகைப்படத்தை கொடுக்க வேண்டும்.
📝 மேலும் அரசின் அடையாள அட்டைகளான ஆதார், பான், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும்.
📝 தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
📝 மொபைல் போன் உட்பட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
📝 தேர்வு மேற்பார்வை பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர்.
📝 வினாத்தாளை கையில் வாங்கிய உடன் அதை நன்றாக, நிதானமாக வாசித்துப் பாருங்கள். ஒரு முறைக்கு இரு முறை கேள்வியை வாசித்துப் பதில் அளித்தாலே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
📝 தெரிந்த கேள்விகளுக்கு முதலிலேயே பதில் எழுதி விடுங்கள். தேர்வு எழுதிக் கொண்டே இருக்கும் போது ஏதாவது ஒன்று தெரியவில்லை என்றால் அதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்து நேரத்தை வீண் செய்யக் கூடாது.
📝 தெரியாத கேள்விகளை விட்டுவிட்டு நன்றாக தெரிந்த மற்ற கேள்விகளுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். பின்பு தெரியாத மற்ற கேள்விகளுக்கு கேள்வியை நன்கு வாசித்துப் பார்த்து அதனுடைய தொடர்புடைய பதிலைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும்.
📝 ரிலாக்சாக தேர்வு எழுதுங்கள். தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு தேர்வை எதிர் கொள்ளுங்கள்.
TET தேர்வில் வெற்றி பெற MBM ACADEMY ன் வாழ்த்துக்கள்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக