புதன், 5 ஜூன், 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. கல்வியில் பெரியவர் என அழைக்கப் பெறுபவர் ------------- - கம்பர்

2. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது? - ஆறு

3. கம்பர் பிறந்த ஊர் ------------- - தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)

4. மொழிகள் பல தோன்றி வளர அடிப்படையான மொழியை ------------- என்பர். - மூலமொழி

5. இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை எனக் குறிப்பிட்டவர் ------------- - ச. அகத்தியலிங்கம்


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும்மொழியை ------------- என்பர். - கிளைமொழிகள்

7. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக.

இறப்பினை என்றும் பொறுத்தல் அதனினும்
நன்று மறத்தல் அதனை.

Ans: பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

8. பொறுத்தல் / பொருத்தல் - பொருள் வேறுபாடு அறிக. - பொறுமையாய் இருத்தல், பொருந்தச் செய்தல்

9. இறத்தல் / இரத்தல் - பொருள் வேறுபாடு அறிக. - சாதல், யாசித்தல்

10. நிறை / நிரை - பொருள் வேறுபாடு அறிக. - சால்பு, வாலசை

11. வண்மை / வன்மை - பொருள் வேறுபாடு அறிக. - வள்ளல் தன்மை, வலிமை

12. நிறை - இருபொருள் தருக. - சால்பு, எடை

13. தலை - இருபொருள் தருக. - உடல் உறுப்பு, சிரம்

14. பொருத்துக.
அ) உளவாக்கல் - 1) அழித்தல்
ஆ) நிலைபெறுத்தல் - 2) இறைவர்
இ) நீக்கல் - 3) காத்தல்
Ans: 4 3 1 2

15. பொருத்துக.
அ) அறம் - 1) எழுபது
ஆ) பொருள் - 2) இருபத்தைந்து
இ) இன்பம் - 3) முப்பத்தெட்டு
Ans: 3 1 2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக