TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் ------------- - சிவபெருமான்
2. மூன்று ஆறுகள் சேருமிடம் ------------- - முக்கூடல்
3. வாய்க்கால் நீரை அடைத்தது யாது? - முத்துகள்
4. விளையாட்டின் அடிப்படை நோக்கம் ------------- ஆகும். - போட்டியிடுதல்
5. தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று ------------- - சிலம்பாட்டம்
6. முல்லை நிலத்தில் ------------- என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது. - ஏறுதழுவுதல்
7. உவப்பத் தலைக்கூடி ------------- பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - உள்ளப்
8. ஒருமைக்கண் தான்கற்ற ------------- ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. - கல்வி
9. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை ------------- - யவை
10. எண் %2B என்ப - சேர்த்து எழுதுக. - எண்ணென்ப
11. கண் %2B உடையார் - சேர்த்து எழுதுக. - கண்ணுடையார்
12. பொருத்துக.
விளையாடுவோர் விளையாட்டு
அ) ஆடவர் - 1) ஓரையாடுதல்
ஆ) மகளிர் - 2) பு%2Bப்பறித்தல்
இ) சிறுவர் - 3) ஏறுதழுவுதல்
ஈ) சிறுமியர் - 4) கிட்டிப்புள்
Ans: 3 1 4 2
13. சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள் யாவை? - பு%2Bப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம்
14. பகாபதம் என்றால் என்ன? - ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.
15. பகுபதம் என்றால் என்ன? - ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக