சனி, 8 ஜூன், 2019

TET தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!


TET தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!

📝 மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது.

📝 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

📝 இந்த ஆண்டு ஆசிரியர; தகுதித் தேர;வு தாள் 2-க்கான தேர்வில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

📝 மேலும் தேர்விற்குத் தேவையான ஹhல்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் போன்றவற்றை தேர்விற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

📝 தேர்வுக்கு முந்தைய நாள் புதுப் பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் தேவையில்லாத பதட்டம் வருவதைத் தவிர்க்க முடியும்.

📝 தேர்வு எழுதும் போது படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாகச் சிந்திக்கும் போது உங்களுக்கு எளிதாக படித்தவைகள் நினைவுக்கு வரும்.

📝 ஒரு வினாவிற்கான விடை நினைவில் வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். கடைசியாக அந்த கேள்விக்கு யோசித்து விடையளிக்க வேண்டும்.

👉 எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை 👈


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக