ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - காந்தவியல்
🍀 ஈர்க்கும் பாறைகளைக் மாக்னஸ் என்ற சிறுவன் கண்டுபிடித்ததால் அது மாக்னட் (magnet) என்றும் அதுவே மாக்னடைட் என்றும் அழைக்கப்பட்டது.
🍀 ஆசியா மைனர் என்று ஒரு பகுதியில் அங்கே மெக்னீசியா என்று ஓர் ஊர் உள்ளது. மாக்னடைட் என்பது அங்கு இருந்த ஈர்ப்புச் சக்தியுள்ள தாதுப் பொருளின் பெயர் ஆகும். அந்த மாக்னடைட் தான் இயற்கைக் காந்தம்.
🍀 இவற்றைக் காந்தக் கற்கள் என்றும் அழைக்கிறோம். இதற்குக் குறிப்பிட்ட வடிவம் கிடையாது.
🍀 இதனை நு}லில் கட்டி தொங்கவிட்டால், இது வடக்கு தெற்குத் திசையையே காட்டுகிறது என்பதால், இது வழிகாட்டும் காந்தம் என்றும் அழைக்கப்பட்டது.
🍀 இரும்புத் தகட்டினைக் காந்தமாக மாற்றும் அறிவியல் முறையை மனிதன் அறிந்த பிறகு, பல வகைக் காந்தங்களை நாம் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட காந்தங்களுக்கு செயற்கைக் காந்தங்கள் என்று பெயர்.
காந்தத் தன்மையுள்ள பொருள்கள் மற்றும் காந்தத் தன்மையற்ற பொருள்கள் :
காந்தத் தன்மையுள்ள பொருள்கள் :
🍀 சில பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றன. எனவே, காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் காந்தத் தன்மை உள்ள பொருள்கள் ஆகும்.
🍀 இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை காந்தத்தன்மையுடைய பொருள்கள்.
காந்தத் தன்மையற்ற பொருள்கள் :
🍀 சில பொருள்கள் காந்தத்தால் ஈர்க்கப்படுவதில்லை. காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்தத் தன்மை அற்ற பொருள்கள் ஆகும்.
🍀 காகிதம், நெகிழி போன்ற பொருள்கள் காந்தத்தன்மை அற்ற பொருள்கள்.
துருவங்கள் :
🍀 காந்தத்தின் இரு முனைகளிலும் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் இரும்புத்தூள்கள் இங்கு அதிகமாக ஒட்டியிருக்கும். இந்த இரண்டு முனைகளையும் துருவங்கள் என அழைக்கின்றோம்.
வட துருவம் மற்றும் தென் துருவம் :
🍀 வடக்கே நோக்கும்முனை வடதுருவம், தெற்கே நோக்கும்முனை தென்துருவம் ஆகும்.
🍀 காந்தத்தின் இந்த திசைகாட்டும் பண்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் காந்த ஊசிப்பெட்டி.
🍀 ஓய்வு நிலையில் இருக்கும்போது காந்த ஊசியானது, வடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
🍀 எனவே, காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்ததுருவங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன.
காந்தத்தின் தன்மைகள் :
🍀 வெப்பப்படுத்தும் பொழுதோ, கீழே போடும் பொழுதோ, சுத்தியால் தட்டும் பொழுதோ காந்தங்கள் அவற்றின் காந்தத் தன்மையை இழந்து விடுகின்றன.
🍀 காந்தங்களைச் சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்றாலும் கூட அவை தமது காந்தத்தன்மையை இழந்து விடுகின்றன.
🍀 ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்துவிடும். அந்தப்பொருள்களும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
🍀 ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின்காந்தங்கள் தேவை.
🍀 1600-ல் வில்லியம் கில்பர்ட் என்ற ஆங்கில அறிவியல் அறிஞர் புவி மிகப்பெரிய காந்தமாகச் செயல்படுகிறது என்பதை அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக