செவ்வாய், 4 ஜூன், 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்


1. பகாப்பதம் எத்தனை வகைப்படும்? - பெயர் பகாபதம், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.

2. பகுபதம் என்றால் என்ன? - பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.

3. பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? - இரண்டு வகைப்படும். 1. பெயர்ப் பகுபதம் 2. வினைப் பகுபதம் ஆகும்.

4. பெயர் பகுபதம் எதன் அடிப்படையில் தோன்றும்? - பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறின் அடிப்படையில் தோன்றும்.

5. பகுபத உறுப்புகள் யாவை? - பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.


6. பகுபதத்தில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உறுப்புகள் யாவை? - பகுதி, விகுதி

7. ஏவல் வினையாக அமைவது எந்த பகுபதம்? - வினைப் பகுபதம்

8. ′இல்′ என்னும் எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் எது? - கண்டிலன்

9. செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை எது? - ′த்′

10. மலை என்ற சொல்லின் வேறுபெயர்கள் யாவை? - வெற்பு, சிலம்பு, பொருப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக