#உலகநாடாளுமன்றம்தினம்ஜூன்30.
இந்திய பாராளுமன்றம் முழு தொகுப்பு மற்றும் கேள்வி பதில்கள்
இந்தியாவின் சட்டசபையாக இந்தியா பார்லிமெண்ட் திகழ்கின்றது. இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் பார்லிமெண்ட் குறித்து குறைந்த பட்சம் என்ன தெரியும் பட்ஜெட் கூடுவார்கள் தெரியும், சண்டை போடுவார்கள் அத்தோடு அது இந்திய சட்ட சபையென்று தெரியும். இந்திய பார்லிமெண்ட் சட்டஇயற்றும் வேலையை மட்டும் செய்யாமல் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், அர்களின் நிர்வாகத்தேவையை பூத்தி செய்யவும், நாட்டின் பாதுகாப்பு என அனைத்து பொறுப்புகளை கொண்டு செயல்படும் கட்டமைப்பே இந்திய பார்லிமெண்ட் ஆகும். பார்லிமெண்ட் இந்திய பார்லிமெண்ட் குறித்து போட்டி தேர்வகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. அது குறித்து அதிகமாக கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் குறித்து கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும். பாராளுமன்றம் குறித்து உங்களது பார்வைக்கு ஒரு கண்ணோட்டமும் அது குறித்து கேள்விகளும் படிப்போம். தேர்வை வெல்வோம். பார்லிமெண்ட் மக்களவை : இந்தியாவில் பார்லிமெண்ட் இந்தியாவின் சட்ட சபையாகும். இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டில் நாட்டு மக்களுக்கு நல்ல அரசு நிர்வாகம் கொடுக்கும் பொறுப்பு கொண்டது பார்லிமெண்ட். பார்லிமெண்ட் இந்திய குடியரசு தலைவர், லோக்சபா, ராஜ்யசபாவின் அங்கம் ஆகும். பார்லிமெண்ட் 1858 ஆம் ஆண்டின் கவுன்சில் சட்டம் கீழ் கொண்டு வரப்பட்ட கவுன்சில் ஆகும். இந்திய குடியரசு தலைவர் மசோதா: பாராளுமன்றத்தின் செயல் தலைவராக அழைக்கப்படுபவர் இந்திய குடியரசு தலைவர் ஆவார். நாட்டில் கொண்டு வரப்படும் சட்டங்கள் அனைத்து அவரது பெயரால் கொண்டு வரப்படுகின்றது எனினும் அவர் கையெப்பமிட்டு ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் மட்டுமே சட்டமாகும். அவ்வாறு கையெழுத்திடாமல் திருப்பி அனுப்ப அவருக்கு முழு அதிகாரம் உண்டு. குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன் எனவும் அழைக்கப்படுகின்றார். நாட்டில் அதிகம் தொகை சம்பாதிப்பவரும் இவரே ஆவார். தற்பொழுதைய மதிப்பு படி ரூபாய் 5 லட்சம் இவருடைய சம்பளம் ஆகும் இந்திய குடியரசு தலைவர்: இந்திய பாராளுமன்றத்தில் அங்கமான குடியரசு தலைவர் தேர்தல் கல்லுரி எனப்படும் எல்க்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதாவது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாநில உறுப்பினர்கள் அடங்கிய குழுவே தேர்தல் கல்லுரின்னு அழைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் செயல் தலைவராக அழைக்கப்படுபவர் இந்திய குடியரசு தலைவர் ஆவார். நாட்டில் கொண்டு வரப்படும் சட்டங்கள் அனைத்து அவரது பெயரால் கொண்டு வரப்படுகின்றது. அதாவது அவர் கையெப்பமிட்டு ஏற்றுக்கொண்ட மசோதாக்கள் மட்டுமே சட்டமாகும். குடியரசு தலைவர் பெயருக்குத்தான் பெரிய பதவி ஆனால் அனைத்து அதிகாரங்களுக் கொண்ட தலைவராக இருப்பவர் இந்திய பிரதமர் ஆவார். பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர்ப் பணி : பாராளுமன்றத்தில் இந்திய குடியரசுத்தலைவர் பணி சிறந்த ஒன்றாகும். நாட்டின் பிரதமர் , மற்ற உறுப்பினர்களுக்கு பதிவி பிரமானம் செய்துவைத்தல் இவருடைய பணியாகும். ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் புதிதாக பாராளுமன்றத்தை கூட்டி உரையாற்றுவார். மசோதாக்களிடையே இரு அவைகளுக்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை கலைந்து கூட்டு கூட்டத்தை கூட்டுவது இவருடைய பணியாகும். Get your 811 account instantly, without any paperwork. உலகின் சிறந்த உணவு மூலம் 1 மாதத்தில் 28 கிலோ குறைத்த நபர்! பிடித்த உணவை தவிர்க்காமல் 30 நாளில் 28 கிலோ எடை குறைக்கலாம் பாராளுமன்ற அவைகள்: பாரளுமன்றம் லோக் சபா, ராஜ்ய சபா என்ற இரு அவைகளை கொண்ட அவையாகும். லோக் சபா உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். லோக்சபா தேர்தலானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடக்கும். லோக் சபா கீழ் அவை என அழைக்கப்படும். லோக் சபா பதவிகாலம் ஐந்தாண்டுகள் ஆகும். லோக் சபா மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 550+ 2 ஆகும். மாநில உறுப்பினர்கள் 530 யூனியன் ஸ்டேட்டில் இருந்து 20 உறுப்பினர்கள் தேர்ந்தெருக்கப்படுகின்றனர். சட்டவிதி 331இன் படி ஆங்கிலோ இந்தியர்கள் இருவரை நியமனம் செய்யும் பணியை குடியரசுதலைவரால் நியமிக்கப்படுகின்றனர். மாநிலங்கள் நில அடிப்படையில் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மக்கள் விகிதசாராம் சரியாக அளந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. லோக் சபா மக்களவை என அழைக்கப்படுகின்றன. லோக் சபாவின் தலைவர் சபாநாயகர் என அழைக்கப்படுவார். சபாநாயகர் பணி மக்களவை பிரதிநிதியாகவும் சிறந்து விளங்குகின்றார். சபாநாயகர் : லோக் சபா மக்களவை என அழைக்கப்படுகின்றன. லோக் சபாவின் தலைவர் சபாநாயகர் என அழைக்கப்படுவார். சபாநாயகர் பணியுடன் மக்களவை பிரதிநிதியாகவும் சிறந்து விளங்குகின்றார். மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் அத்துடன் சிறப்புரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த அவை உறுப்பினர்களின் அதிகாரம் அனைத்திற்கும் பாதுகாவலராக இருந்தார். அவையின் பொறுப்பாளராக சபாநாயகர் திகழ்வார், சபையின் தலைமை பேச்சாளராக இருந்து சபை நடவடிக்கைகளுக்கு சபாநாயகரின் முடிவே இறுதியானதாக இருக்கும். சபாநாயகர் என்பவர் அவையில் விவாதம் வாக்கெடுப்பு நடக்கும் பொழுது அவையில் ஒரு கருத்துக்கு சமமான வாக்குகள் இருக்கும் பொழுது தனது வாக்குரிமையை பயன்படுத்துவார். ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என முடிவெடுத்து அனுமதி வழங்கும் உரிமை அவருக்கே உண்டு. சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அவரை போன்று துணை சபாநாயகரும் சபா உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார். சபாநாயகர் தேர்வுக்குப்பின்பு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிரதமர்: லோக்சபாவின் தலைவராக மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் பெருமாண்மை உறுப்பினர்களுள் ஒருவரான பிரதமர் ஆவார். மாநிலங்களவையின் தலைவரை பிரதமர் நியமிப்பார். பிரதமர் பாராளுமன்றத்தில் நேரடி தலைவராக இருந்து உறுப்பினராகவும் செயல்படுகின்றார். நாட்டின் முக்கிய முடிவுகளை அவ்வப்போது குடியரசு தலைவருக்கு அறிவிப்பது இவரது பணியாகும். அமைச்சரவை : இந்திய பாராளுமன்றத்தில் அமைச்சரவை மூன்று வகையான அமைச்சரவைகளை கொண்டது. கேபினெட் அமைச்சர்கள் தனிபொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மக்களவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைந்து போகும். மாநிலங்களவை நிரந்தரமானது ஆகும். குடியரசு தலைவர் விரும்பும் போது அல்லது தானாகவே அமைச்சரவையை கலைந்துபோகும். அமைச்சரவை பெரும்பாணை உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில்தான் அமைச்சரவை பதவியில் நீடிக்கும். எதிர்கட்சி தலைவர்: பாராளுமன்றத்தில் ஒவ்வொரு அவையும் ஒரு எதிர்க்கட்சி தலைவரை கொண்டிருக்கும். 1/10 பங்கு உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சியே எதிர்கட்சியாக அங்கிகரிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவர் ஊதியம் மற்றும் படிகள் கொண்ட கேபினெட் பதவிக்கு இணையானது ஆகும். மதிப்பீட்டு குழூ: அமைச்சரவையில் மதிப்பீட்டு குழுவில் மொத்தம் 30 உறுப்பினர்களை கொண்டுள்ளனர். மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் லோக் சபாவில் இருந்துதான தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பீட்டுக்குழு அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும். அரசின் கொள்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கும். நிர்வாக மேம்பாடு, அரசின் நிதி அறிக்கையை ஆய்ந்து தெளிவான ஆலோசனைகள் வழங்கும் பணியை செய்கின்றது. மதிப்பீட்டுகூட்டு குழுவுக்கான தலைவரை மொத்த உறுப்பினர்களிலிருந்து ஒருவரை சபாநாயகர் நியமிக்கின்றார். ஒரு அமைச்சர் இக்குழுவின் உறுப்பினராக செயலாற்ற முடியாது. மதிப்பீட்டு குழுவின் பதவிகாலம் ஓராண்டு ஆகும். பொது கணக்கு குழு : பொதுக்கணக்கு குழு மிகப்பழமையானது இக்குழுவுக்கு மொத்த 22 உறுப்பினர்கள் லோக் சபாவிலிருந்தும் 15 உறுப்பினர்கள் இராஜ்ய சபாவிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். பொது கணக்கு குழுவுக்கு மரபு அடிப்படையில் எதிர்க்கட்சி உறுப்பினரே தலைவராக இருந்து செயல்படுகின்றார். பொது கணக்கு குழு பொது செலவுகளின் கணக்குகளை ஆராய்கின்றது. மேலும் இந்திய தணிக்கை அழுவலரின் அறிக்கை குறித்து ஆராய்கின்றது. பாராளுமன்றத்தில் சக்திவாய்ந்த அவையாக இருப்பது லோக்சபா ஆகும். லோக் சபா பண மசோதாவை தாக்கல் செய்யும் உரிமையுடையது. மக்களவை சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாக அதிகார்ம் , நீதுத்துறை அதிகாரங்களை கொண்டுள்ளது. மக்களவை குளிர்கால கூட்டத்தொடர், கோடைகால கூட்டதொடர், மழைக்கால கூட்டத்தொடர் என மூன்று மமுறை கூட்டப்படும். மக்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 25 வயது முடிந்திருக்க வேண்டும். பணமசோதா மக்களவையில் மட்டும்தான விவாதிக்க முடியும். ஆனால் மாநிலங்கள் அவையில் 14 நாட்களுக்குள் விவாதித்து முடிவு சொல்ல வேண்டும். இல்லையெனில் மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளதாக கருதப்பட்டு அவை சட்டமாக்கப்படும். மாநிலங்களவை : மாநிலங்களவை அல்லது ராஜ்யசபா என அழைக்கப்படுகின்றது. ராஜ்ய சபா மொத்தம் 250 உறுப்பினர்கள் கொண்ட அவையாகும். இந்த அவையின் உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12 பேர் இந்திய குடியரசு தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படுகின்றனர். மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பதவிக்காலம் ஆறாண்டு ஆகும். மக்களவை போல் மாநிலங்கள் கலைக்கப்படுவது இல்லை ஆனால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். மக்களவை கூட்டங்களை போல் மாநிலங்கள் அவை கூட்ட்ங்கள் நடககது இது தொடர்ச்சியாக நடைபெறும். இரு அவைகளிலும் ஒரு சட்டம் மசோதா தொடர்பான முடிவுகள் எடுக்க கூட்டுகூட்டம் அமைக்கப்படும். . மாநிலங்கள் அவைக்கு மறுப்பு அதிகாரங்களை கொண்டதாக கருதப்படுகின்றது. மாங்கிலங்கள் அவையின் தலைவரக துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். மாநிலங்களின் முதல் கூட்டம் மே 13, 1952இல் தொடங்கப்பட்டது. கேள்விகள் பாராளுமன்றம் குறித்து போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் அறிவோம் தேர்வுகளை வெல்வோம். 1. பாராளுமன்றத்தின் அங்கங்கள் யாவை? 2. பாரளுமன்றத்தின் எத்தனை அவைகள் உள்ளன? 3. லோக் சபாவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? 4. சபாநாயகர் என்பவர் யார்? 5. மாநிலங்கள் அவையின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்? 6. பண மசோதா என்பதை உறுதி செய்யும் அவை எது ? 7. மக்களவைக்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை ? 8. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் 9. மக்களவை எத்தனை அமைச்சர்கள் உள்ளனர்? 10. பொது கணக்கு குழு என்பது யாது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக