செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

பாரதியார் -25

பாரதியார் -25

1. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் யாருடையது - பாரதியார்
2. எந்த மன்னர் பாரதியாருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார் - எட்டப்ப நாயக்கர்
3. பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில எந்த ஆன்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டது - 1949
4. முண்டாசு கவிஞன் என்று போற்றபடுகிறவர் யார் - பாரதியார்
5. பாரதியார் பிறந்த ஆண்டு எது - 1882
6. நவதந்திரக்கதைகள் படைத்தவர் யார் - பாரதியார்
7. பாரதியார் படைத்தது எது - பொன் வால் நரி
8. பாட்டுக்கொரு புலவன் யார் - சுப்பிரமணியன்
9. ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றுபாடியவர் யார் – பாரதியார்
10. ஔவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் யார் -பாரதியார்
11. பாரதியாரை அடைமொழியால் குறிக்கும் பெயர் எது - சிந்துக்குத் தந்தை
12. பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார் - வ. ராமசாமி அய்யங்கார்
13. பாரதியின் முதல் பாடல் எது - தனிமை இரக்கம்
14. பாரதி தன்னை என்னவென்று அழைத்துக்கொண்டார் - ஷெல்லிதாசன்
15. பாரதியார் எந்த பத்திரிக்கையின் முலம் தனது அரசியல் கருத்துக்களைமக்களிடம் பரப்பினார் - இந்தியா
16. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்

17. பாரதியார் அரசியல் குருவாக யாரை ஏற்றுக்கொண்டார் - பாலகங்காதர திலகர்
18. பாரதியாரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் அஞ்சல்தலை ------------ ம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்டது – 1960
19. ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் பாரதியார் -----------------என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார் – ஷெல்லிதாசன்
20. பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் -------------------- ஆவார் - கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்
21. பாரதியாரின் ஞானகுரு ---------------------- ஆவார் - நிவேதிதா தேவி
22. பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் - விவேகபானு
23. பாரதியாரின் படத்தினை வரைந்தவர் - ஆர்ய என்ற பாஷ்யம்
24. பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் – கிருஷ்ணசாமி ஐயர்
25. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் ------------------ ஆகியவை ஆகும் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
26. கலகலென, குக்குவென என்பதன் இலக்கணக்குறிப்பு - இரட்டைக்கிளவி
27. -------------- ஆம் ஆண்டு பாரதியாருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார் – 1887
28. பாரதியார் ----------------- ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் – 1897
29. பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று பாரதியாரை புகழ்ந்து போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
30. பாரதியாரால் தம்பி என அழைக்கப்பட்டவர் - பரலி நெல்லையப்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக