செவ்வாய், 27 செப்டம்பர், 2016

உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27


உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 .

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொரு ளாதாரத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்., 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் தண்ணீர்: எதிர்கால தேவையை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக்கருத்து.

சுற்றுலா பலவிதம்

கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா, வியாபார சுற்றுலா என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட் டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதிய இடங் களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா இடங்கள் உள்ளன.

2012 ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி பேர் சுற்றுலா மேற்கொண்டனர். இது 2010 ஆம் ஆண் டோடு ஒப்பிடும் போது, 3.8 சதவீதம் அதிகம் என உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

இந்தியா இந்த பட்டியலில் இல்லாதது, சுற்றுலாத்துறையில் நாம் எந்தளவுக்கு பின்னடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகை ஈர்க்கும் நாடு எத்தனை பேர்

பிரான்ஸ்                           8 கோடியே 30 லட்சம்
அமெரிக்கா                        6 கோடியே 70 லட்சம்
சீனா                                   5 கோடியே 77 லட்சம்
ஸ்பெயின்                         5 கோடியே 77 லட்சம்
இத்தாலி                            4 கோடியே 64 லட்சம்
துருக்கி                              3 கோடியே 57 லட்சம்
ஜெர்மனி                           3 கோடியே 4 லட்சம்
இங்கிலாந்து                     2 கோடியே 93 லட்சம்
ரஷ்யா                              2 கோடியே 57 லட்சம்
மலேசியா                        2 கோடியே 50 லட்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக