செவ்வாய், 27 செப்டம்பர், 2016

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்

இந்தியாவில்
சாதனை படைத்த முதல் பெண்கள்

இந்தியாவில்
சாதனை படைத்த முதல் பெண்கள்
பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று
சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள் ளோம்.

ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண்
முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல் வேறு
பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும்
பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி
எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு
காணலாம்.


* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா
பாட்டில் 2007


* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கவுர்
(1947 - 57)


* முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு (1947 -
1949)


* மாநிலங்களவை முதல் பெண் பேரவை துணைத் தலைவர்
- வயலட் ஆல்வா


* முதல் பெண் முதல்வர் (உத்திரப்பிரதேசம்) - சுசேதா
கிருபளானி (1963 - 1967)

* குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல்
பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)


* முதல் பெண் அய்ஏஎஸ் அதிகாரி - அன்னா
ராஜன் ஜார்ஜ்


* மக்களவை முதல் பெண் பேரவைத் தலைவர் - மீரா
குமார் (2009)


* மகசேசே விருது பெற்ற முதல் பெண்மணி -
அன்னை தெரசா (1962)


* இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல்
பெண்மணி - அன்னிபெசன்ட் (1917)

* காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி -
சரோஜினி நாயுடு (1925)

* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி -
பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004)


* பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா
ராணி ரோரிச் (1969)


* புக்கர் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் - அருந்ததி
ராய் (1997)


* மிஸ்வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி -
ரீத்தா ஃபரியா பவல் (1966)

* மிஸ்யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல்
பெண்மணி - சுஷ்மிதா சென் (1994)

* பாரத ரத்னா விருது பெற்ற முதல்
பெண்மணி - இந்திராகாந்தி (1971)

* ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி -
பானு அதய்யா

* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966)

* உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி -
எம்.பாத்திமா பீவி (1989)

* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி -
(கேரளா) அன்னா சாண்டி (1959)

* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி -
(இமாச்சல்) - லீலா சேத் (1991)

* அய்.நா. பொதுச்சபையின் முதல் பெண்
தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்

* முதல் பெண் அய்பிஎஸ் - கிரண்பேடி (1972)

* விண்வெளி சென்ற முதல் பெண்மணி -
கல்பனா சாவ்லா


* எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி
பால்

* ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல்
பெண்மணி - சுரதி ஸாஹா


* ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல்
பெண்மணி - பிலா சவுத்ரி

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி -
ஆஷாபூர்ணா தேவி (1976)

* ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி -
நீலிமா கோஷ் (1952)

* லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல்
பெண்மணி - புனிதா அரோரா (2004)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக