சனி, 3 செப்டம்பர், 2016

ஒன்பதாம் திருமுறை

💥ஒன்பதாம் திருமுறை

ஒன்பதாம் திருமுறையை பாடியவர்கள் ஒன்பது பேர்

💥ஒன்பதாம் திருமுறை, “திருவிசைப்பா”, “திருப்பல்லாண்டு”, “தில்லைத் திருமுறை” எனப்படும்

💥இறைவனுக்கு பல்லாண்டு பாடியவர் சேந்தனார்

இதில் உள்ள மொத்த பதிகங்கள் = 29

💥தேவாரத்தில் காணப்படாத “சாளரபாணி” என்ற பண் இதில் உள்ளது.

💥திருமூலர்

இவரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்.

💥திருமூலர் ஒரு சித்தர்.

💥இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர்

💥இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை

💥திருவாவடு
துறைக்கு “நவகோடி சித்தபுரம்” என்ற பெயரும் உண்டு.

💥திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை

💥திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு.

💥இந்நூலில் 9 தந்திரங்களும், 232 அதிகாரங்களும் உள்ளது.

💥முதல் சித்த நூல்

💥திருமந்திரம்
யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்

💥“சைவ சித்தாந்தம்” என்னும் தொடர் முதலில் திருமந்திரத்தில் தான் உள்ளது.

💥இவர் நந்தி தேவரின் அருள் பெற்றவர்.

💥சைவசமயத்தின் முதல் நூல் இதுவே.

💥நாயன்மார்களில் மூத்தவர் இவரே.

💥திருமூலரின் பழைய பெயர் = சுந்தரன்

💥நந்திதேவர் வழங்கிய பெயர் = நாதன்


மேற்கோள்:

💥ஒன்றே குலம் ஒருவனே தேவன்

💥யான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

💥அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்

💥மரத்தை மறைத்தது மாமத யானை

💥அன்பே சிவம்

💥உடம்பார் அழியின் உயிரார் அழிவார்

💥உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

💥படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

பதினோராம் திருமுறை

💥12 பேர் பாடியுள்ளனர்.

💥மொத்தம் 40 நூல்கள் உள்ளன.

💥1400 பாடல்கள் உள்ளன.

💥இதனை “பிரபந்தமாலை” என்றும் அழைப்பர்.

💥காரைக்கால் அம்மையார்

இவரின் இயற்பெயர் = புனிதவதி

பிறந்த ஊர்  = காரைக்கால்

கணவன் = வணிகன் பரமதத்தன்

💥திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிப்பட்டவர்.

இவர் பாடல்கள் மட்டுமே “மூத்த திருப்பதிகம்” என்று சிறப்பிக்கப்
படுகிறது

💥கட்டளைக் கலித்துறை என்ற புதுவகை யாப்பைப் படைத்தவர்

💥ஒரு பொருளைப் பல பாடலில் பாடும் பதிக மரபை முதன் முதலாக தொடங்கி வைத்தவர்.

💥அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.

💥இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்.

💥கோயிலில் நாயன்மார்கள் எல்லாம் நின்ற கோலத்தில் இருக்க இவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்பு பெற்றவர்.

💥இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் கால்பதிக்க அஞ்சி சம்பந்தர் ஊர் வெளியில் தங்கினார்.

💥இவர் பாடியவை =
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்,

திருஇரட்டை மணிமாலை,

அற்புதத் திருவந்தாதி

💥இறைவனிடம் “பேய்” உருவம் வேண்டி கேட்டவர்.

இவரின் பாடல்கள் சமய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாகும்





💥சேரமான் பெருமாள் நாயனார்

இவர் பாடியவை =

பொன்வண்ணத் தந்தாதி,

திருவாரூர் மும்மணிக்கோவை,
திருகைலாய ஞான உலா

💥இவரின் இயற் பெயர் = பெருமாக்
கோதையார்

💥இவர் சுந்தரரின் நண்பர்

💥இவரை “கழறிற்றறிவார்” என அழைக்கப்படுவார்

💥இவரின் “திருகைலாய ஞான உலா” தமிழின் முதல் உலா நூல்.

💥இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என அழைப்பர்

💥இவர் சேர மரபினர்





💥
நம்பியாண்டார் நம்பி

💥இவர் பாடிய நூல்கள் ஒன்பது

💥“தமிழ் வியாசர்” எனப்படுபவர் இவர்.

💥இவரே திருமுறைகளைத் தொகுத்தவர்.

இவரின் ஊர் = திருநாரையூர்








💥பெரியபுராணம்

ஆசிரியர் குறிப்பு:

இயற் பெயர் = அருண்மொழித்
தேவர்

பிறந்த ஊர் = குன்றத்தூர்

நூல் குறிப்பு;

சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம்

இதனை “திருத்தொண்டர் மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது

💥“சைவ சமயத்தின் சொத்து” எனப் போற்றப்படும் நூல் இது.

💥“சைவ உலகின் விளக்கு” எனப் போற்றப்படுகிறது

💥“எடுக்கும் மாக்கதை” என நூல் ஆசிரியரே குறிப்பிடுகிறார்.

💥சேக்கிழாரின்வேறு பெயர்கள்:

உத்தம சோழப் பல்லவன்

தொண்டர் சீர் பரவுவார்

இராமதேவர்

மாதேவடிகள்

💥குறிப்பு:

இவர் அநபாய சோழனிடம் அமைச்சராக இருந்தவர்.

💥சுந்தரரின் திருத்தொண்டத்
தொகை
முதல் நூல்.

💥நம்பியாடார் நம்பியின் திருத்தொண்டத் திருவந்தாதி
வழி நூல்.

💥சேக்கிழாரின் பெரியபுராணம்
சார்பு நூல்.

💥
பெரியபுராணத்தில் 💥2 காண்டம்
💥13 சருக்கம் உள்ளது.

💥முதல் சருக்கம் = திருமலைச்சருக்கம்

💥இறுதி சருக்கம் = வெள்ளையானைச் சருக்கம்

💥நூலில் 63 நாயன்மார்
களையும்
9 தொகை அடியார்களையும் கூறியுள்ளார்.

💥பெரியபுராணத்தின் தலைவன் = சுந்தரர்

💥நூலில் பெரும் பகுதி திருஞானசம்பதர் பற்றிய குறிப்பு உள்ளது.

💥சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.

சிறப்பு;

💥“இறைவனே சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்து கொடுக்க பாடினார்.

💥தமிழின் முதல் களஆய்வு நூல் பெரியபுராணம்

💥தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்

💥மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில்
“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சிறப்பிக்கிறார்.

💥“சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
சிவஞான முனிகள், “எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்” என கூறுகிறார்.

💥பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிராட் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக